வெள்ளியில் விளக்கு.. பூஜை அறையில் வெள்ளி விளக்கை ஏற்றலாமா? இந்த ஒரு பொருளை சேர்த்து பாருங்க.. செம்ம
சென்னை: தினமும் காலையும் மாலையும் வீட்டை சுத்தம்செய்து, குளித்து முடித்து, பூஜையறையில் விளக்கைக் கொண்டு ஏற்றி, இறைவனை வழிபட்டால், வீட்டிலுள்ள தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், தரித்திரங்கள் விலகும் என்பார்கள்.. அந்தவகையில் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு பலன்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன. அந்தவகையில் வெள்ளி விளக்கை வீட்டில் ஏற்றலாமா? இதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எப்போதுமே வீட்டில் விளக்கை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது.. இதனால் குடும்பத்தில் செல்வம், அமைதி, நலன் போன்றவை பெருகும்..

எனவே, வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் போன்ற நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் பூஜைக்கேற்ற நாட்கள் ஆகும்.
குத்து விளக்கு
வலது கையால் தான் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். விளக்கில் திரியை கீழே சாய்க்ககூடாது.. குத்து விளக்கை வீட்டில் ஏற்றி வைத்தால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்) பயன்படுத்தினால் நல்லது என்பார்கள்..
பொதுவாக பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்கைக் கொண்டு தீபமேற்றி வழிபட்டால், தடைப்பட்ட காரியங்களெல்லாம் சிறப்பாக நடைபெறும் என்பார்கள்.. அதேபோல வெண்கல விளக்கில் தீபமேற்றி வழிபட்டால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கூடும்..
இரும்பு விளக்குகள்
இரும்பால் செய்யப்பட்ட விளக்கில்கொண்டு தீபமேற்றி பிரார்த்தித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் தொல்லைகள் கஷ்டங்கள் விலகும்.. அத்துடன் நாம் நினைத்த காரியத்தை சனி பகவான் நிறைவேற்றி தருவார்..
அதேபோல காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும்போது, 5 முகம், அல்லது 2 முகம் கொண்ட விளக்குகளை ஏற்றலாம். இதனால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
வெள்ளி உலோகம்
அதேபோல, மண் விளக்குக்கு அடுத்தபடியாக வெள்ளி உலோகத்திற்கு லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய சக்தி உள்ளதாம்.. பொதுவாக பூஜைஅறையில் பித்தளையிலான விளக்குகளையே வைத்திருப்போம்.
ஆனால், ஒரே ஒரு வெள்ளி விளக்கை பூஜையறையில் வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வரும்போது, அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.. தீராத கடன் தொல்லை, வீட்டில் பிரச்சனைகள் இருந்தால், நெய் விளக்கில் விளக்கேற்றி வரலாம். அதிலும், 2 குன்றின்மணிகளையும் அந்த விளக்கில் சேர்த்து தீபம் ஏற்றினால் பொருளாதார சிக்கல்கள் நீங்கும். சிவப்பு கருப்பு நிறத்திலுள்ள குன்றின் மணிகள் விளக்கேற்றுவதற்கு ஏற்றவையாகும்.
வெள்ளியில் விளக்கு பூஜை
விளக்கேற்றி முடித்து மீண்டும் விளக்கை சுத்தம் செய்யும்போது பழைய குன்றின் மணியை, ஓடும் நீரில் போட்டுவிட்டு, புதிய 2 குன்றின் மணிகளை போட்டு விளக்கேற்றலாம். இதனால் மகாலக்ஷ்மியின் பேரருள் கிடைக்கும்.
எப்படி சுத்தம் செய்வது
வெள்ளி விளக்கை சுத்தம் செய்வதாக இருந்தால், விபூதியை பயன்படுத்தலாம்.. வெள்ளி விளக்கின் மீதமுள்ள எண்ணெய்யை துணியால் துடைத்து எடுத்துவிட வேண்டும்.. பிறகு விளக்கில் மஞ்சள், குங்குமம் சேர்த்து துடைக்க வேண்டும்.
இப்போது சிறிது தண்ணீரையும், விபூதியையும் மாறி மாறி தொட்டு நனைத்து, வெள்ளி விளக்கை பூசி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.. இறுதியாக சுத்தமான தண்ணீரில் கழுவி துடைக்கும்போது, விளக்கின் மீது படர்ந்துள்ள கருமை நீங்கிவிடும்..
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications