கந்த சஷ்டி 2024.. சூரசம்ஹாரத்தில் 1 நாள் சஷ்டிவிரதம் இருக்கலாமா? இந்த ஒரு விளக்கை ஏற்றினாலே போதுமே
தூத்துக்குடி: சஷ்டி விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியாவிட்டாலும்கூட, இன்று ஒரே ஒரு நாள் மட்டும் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு 7 நாட்கள் விரதம் இருப்பதற்கான பலனை அடைய முடியும். எப்படி தெரியுமா? சூரசம்ஹாரம் தினத்தன்று மேற்கொள்ளப்படும் வழிபாடுகள், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
சஷ்டி விரதம் மேற்கொண்டால், துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.. இதனால், மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும்.. திருமண பாக்கியமும் விரைந்து கைகூடும். பிள்ளை வரம் கிடைக்கும்..

அதேபோல, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதால், செரிமான சக்தி ஓய்வெடுக்கும்... நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும்.. அந்தவகையில், செரிமான சக்தி தான் பார்வதி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தான் முருகப்பெருமான். உடம்பில் தோன்றும் நோய்தான் அரக்கன்... வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது. அதனால் தொடர்ந்து 6 நாட்கள் சஷ்டி விரதம் இருந்ததன் பலனாக நோய் என்ற அரக்கனை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் அழிக்கலாம்.
குலதெய்வம்: ஆனால், கந்தசஷ்டியின் 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட சூரசம்ஹாரம் அன்று ஒரு நாள் விரதம் இருந்தாலும் முருகப் பெருமானின் அருளை பெற முடியும். இதற்கு முருகன் படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து மனதார குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், முருகப் பெருமானையும் வழிபட்டு விரதத்தை துவக்கலாம்.
எனினும் இன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க நினைப்பவர்கள், காலையில் இருந்து மாலை வரை உபவாசம் இருக்கலாம்.. உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, பட்டினி விரதம், பால் பழம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்கலாம்.. ஆனால், தண்ணீர் நிறைய குடித்து கொண்டேயிருக்க வேண்டும். காலையும், மாலையும் 6 விளக்குகளை ஏற்ற வேண்டும். முருகனின் படத்திற்கு, பூ, சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு செய்யலாம்.
சூரசம்ஹாரம்: பிறகு சூரசம்ஹாரம் முடிந்ததுமே கட்டாயமாக குளித்து, முருகனின் திருவுருவப் படத்திற்கு 6 தீபங்கள் ஏற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். பால், பழங்களை வைத்து நைவேத்தியம் செய்யலாம்.. அல்லது 6 வகையான சாதம் செய்தும் முருகனுக்கு படைக்கலாம். விதவிதமான சாதம் செய்ய முடியாவிட்டாலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம்... சஷ்டியின் இந்த கடைசி நாளில் ஏதாவது ஒரு உணவை பிறருக்கு தானமாக வழங்கலாம்.
விரதம் கடைபிடிப்பவர்கள் பகலில் தூங்கவோ, டிவி பார்க்கவே கூடாது.. இன்று ஒரு நாள் முழுவதும் காலில் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும். நாள் முழுவதும் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் போன்ற சரணங்களை சொல்லலாம்..
அகல் விளக்கு: அதேபோல, ஒரு தட்டில், 1 ஸ்பூன் மிளகை பரப்பி வைத்து, அதைச்சுற்றிலும் கொண்டைக் கடலையை பரப்பி வைக்க வேண்டும்... பிறகு தட்டின் நடுவிலுள்ள மிளகிற்கு மேல் ஒரு அகல் விளக்கில், நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தக் கூடாது.. இந்த தீபத்தை நெய் விட்டு ஏற்றினால் இன்னும் சிறப்பு.. ஒருமணி நேரம் விளக்கு நன்றாக எரியவிட வேண்டும்.
மறுநாள் காலை அகல் விளக்கை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, தட்டிலிருக்கும் மிளகில் 4, கொண்டைக்கடலையில் 4 எடுத்து, ஒரு சிவப்பு நிற துணியில் முடிச்சாக கட்டி வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். மற்ற மிளகுகளை ஓடும் தண்ணீரில் விட்டுவிடலாம். கொண்டைக்கடலையை பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம்.
பணப்பிரச்சனை: சிவப்பு நிற துணியில் கட்டப்பட்டிருக்கும் மிளகும், குரு பகவானுக்கு ஏற்ற கொண்டை கடலையும் கடனை போக்கி, பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டவை.. எனவே, கந்தசஷ்டியில் இப்படி தீபம் ஏற்றினால் பணப்பிரச்சனை நீங்கும்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications