Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்த பூர்ணிமா 2025.. வைகாசி பொறந்தாச்சு.. புத்த பூர்ணிமாவுக்கு அரச மரத்தை வணங்குவது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தரின் பிறந்தநாளான இன்று புத்த பூர்ணிமாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமாவையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புத்த பூர்ணிமாவின் சிறப்புகள், மகத்துவங்கள் என்னென்ன தெரியுமா?ஆசைக்கு காரணம் துன்பம் - என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர் புத்தர்.. நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை,நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் போன்ற எண்வகை வழிகளையும் உலகுக்கு போதித்தவர்.

பெயர்க்காரணம்

தன்னுடைய பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார். "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று அர்த்தமாம்.. தன்னுமைடய ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று, இந்த புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், 2025ம் வருடத்துக்கான புத்த பூர்ணிமாவும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தருக்கு ஞானம்

புத்தருக்கு ஞானம் கிடைத்த தினத்தையே, புத்த பூர்ணிமா என்கிறார்கள்.. பீகார் மாநிலத்திலுள்ள புத்த கயா என்ற இடத்தில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக சொல்கிறார்கள்.. புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் இந்த புத்த பூர்ணிமாவில் நடந்ததாக பவுத்தர்களால் நம்பப்படுகிறது. அதனால்தான், புத்த கயாவில், புத்த பூர்ணிமாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது..

அதேபோல உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத் மற்றும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், லடாக், டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் இந்த புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமாவை, புத்த பௌர்ணமி, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்றெல்லாம் என பல பெயரில் அழைக்கப்படுகிறது..

வெண்ணிற ஆடை - கீர் பானம்

உலகம் முழுவதுமுள்ள பௌத்தர்களும், பௌத்த மதத்தின் மீது பற்று வைத்திருப்பவர்களும், இந்த புத்த பூர்ணிமா நாளன்று, விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டி கொள்வார்கள்.. அதுமட்டுமல்ல, தியானம் என்பது மன அமைதியை தந்து, நம்முடைய வாழ்வை செம்மைப்படுத்தும் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள். இதற்காகவே, புத்தர் கோயிலுக்கு சென்று, பிரார்த்தனை செய்வதுடன், பல்வேறு பொருட்களையும் பிறருக்கு தானமாக வழங்குவார்கள்.

அதுமட்டுமல்ல, இந்நன்னாளில் புத்த மதத்தினர் வெண்மை நிற ஆடைகளையே உடுத்தி, சிறப்பு வழிபாடுகள், விழாக்களை நடத்துவார்கள். புத்த பூர்ணிமா தினத்தில் கீர் என்ற பானத்தை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்வார்கள்.

வரலாற்று எச்சங்கள்

இன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் நிலையில், புத்த சமய வரலாற்று எச்சங்களை நாம் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதாவது, தமிழகம் முழுவதும் புத்த சமயத்தைச் சேர்ந்த எச்சங்கள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, பாண்டிய நாட்டில் புத்த சமயம் பரவி இருந்ததற்கான எச்சங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் புத்த எச்சங்கள் அதிகமாக உள்ளன. எனவே, புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இந்நாளில் புத்த சமய வரலாற்று எச்சங்களை நாம் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

அரச மரம் சிறப்பு

புத்த பூர்ணிமா நாளில் புத்த மரத்தை வணங்குவார்கள்.. இந்து மதத்தை போலவே பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டதாக உள்ளது.. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும். சமஸ்கிருதத்தில் போதி என்பார்களாம்.. இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+