செம்பருத்தி இலை தீபம்.. அற்புதம் செய்யும் அசோக இலைகள்.. வீட்டில் இதை செய்தாலே, பணம் நிற்காமல் வருமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத்தில் வறுமை நீங்கி, மகிழ்ச்சி பொங்க வேண்டுமானால், சில எளிய பரிகாரங்களை இறைவனுக்கு செய்யலாம்.. அந்தவகையில், 2 வகையான இலைகளை வீட்டில் வைத்திருக்கும்போது, கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? தெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த 2 இலைகள் என்னென்ன?

நினைத்த காரியங்கள் கை கூடி வர வேண்டும் என்றால், செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றுவது வழக்கமாகும்.. நிலம் வாங்குவதில், விற்பதில் பிரச்சனை இருந்தாலும் சரி, தற்போதுள்ள வீட்டை விற்றுவிட்டு புதுவீடு வாங்குவது அல்லது தற்போதுள்ள வீட்டையே இடித்துவிட்டு புது வீடு கட்டுவது உள்ளிட்ட நிலப்பிரச்சனைகளை தீர்க்க இந்த வெற்றிலை தீபம் ஏற்றுவார்கள்.

spirituality hibiscus leaf lamp ashok leaves

வெற்றிலை தீபம்: செவ்வாய்க்கிழமைகளில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் பூமி தொடர்பான சிக்கல்கள் அத்தனையும் தீரும்.. வெற்றிலை போலவே, அசோக மரத்தின் இலைகள் அற்புதம் செய்யக்கூடியவை. அன்னை லட்சுமி அசோக மரத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான் அசோக மரத்தின் இலைகள், பூஜைகளிலும், சுப காரியங்களிலும் தவறாமல் பயன்படுத்தப்படுகிறது..

இந்த அசோக இலைகளை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டால் போதும், வீட்டிலுள்ள மொத்த தோஷங்களும் நீங்கிவிடும்.. வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் வெளியேற்றப்பட்டு, நேர்மறை சக்திகள் வீட்டினுள் கொண்டு வரப்படும்..

அசோக மரம்: வீட்டின் பொருளாதார நிலையும் வலுப்பெறும்.. உங்களது பணம் வெளியில் சிக்கியிருந்தாலும், விரைந்து உங்கள் கைக்கு வந்து சேரும்.. அசோக மரத்தின் இலைகளை வீட்டில் வைத்திருப்பதால், லட்சுமி தேவியின் அருள் வீட்டில் நிலைத்திருக்கும்,.

அதேபோல, செம்பருத்தி இலைகளில் தீபம் ஏற்றுவதால், குடும்பத்திலுள்ள சகல துன்பங்களும் தீர்ந்துவிடும். செம்பருத்தி இலையின்மீது சிறிது தேங்காய் எண்ணெய் தடவி, அதை ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, வெள்ளை நிறத்தில் பஞ்சு திரி போட்டு, விளக்கேற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும். இப்போது உங்கள் குறைகளை சொல்லி, மனதார வேண்டிக்கொண்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அகல் விளக்கு: எண்ணெய் தீரும் வரை அகல் விளக்கு எரிந்து முடிந்ததும், மறுநாள் அந்த செம்பருத்தி பூ இலையை கால்படாத இடத்தில் வீசிவிட வேண்டும். பிறகு ஒருவாரம் கழித்து, மறுபடியும் புதிய செம்பருத்தி இலையில், மண் அகல் விளக்கை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது, குடும்பத்தில் சிக்கல்கள் தீரும்.. தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். பொருளாதார பிரச்சனையும் தீரும்.

அதேபோல, செவ்வாய்க்கிழமைகளில், நம் வீட்டு மனையிலிருந்து, ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து, அதில் சிறிது மஞ்சளை கலந்து தட்டில் வைத்து அந்த மண்ணிற்கும் மேல், அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றி வரவேண்டும். இதனால் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிட்டுவதுடன், கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும் என்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+