ஜவ்வாது விளக்கு பரிகாரம்.. இன்னல் தீர்ந்து மகிழ்ச்சி பொங்க ஜவ்வாது போதுமே.. ஜம்முனு மணக்கும் ஜவ்வாது
சென்னை: ஆன்மீகத்தில் ஜவ்வாது பொடிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது.. கோயில்களில் ஜவ்வாது எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜவ்வாது விளக்கு வீட்டில் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சந்தனக் கட்டை, ஒருசில மூலிகைகள், வாசனைமிக்க பூக்களை வைத்து தயாரிக்கப்படுவதுதான் ஜவ்வாது.. கோயில்களில் மூலவர் தெய்வங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது... புனுகுடன் சேர்ந்து ஜவ்வாது பயன்படுத்துவதால், தெய்வீகம் கோயில் முழுக்க நிறைந்திருக்கும்.நேர்மறையான ஆற்றலாக பக்தர்களுக்கும் இது கிடைக்கிறது.

கோயில்கள்: லிங்க வடிவிலான சிவன் கோயில்களுக்கு பூஜைப்பொருட்களுடன் சேர்த்து ஜவ்வாது தரலாம். 9 வாரம் இப்படி தருவதால், வியாபாரத்திலுள்ள தடைகள் நீங்கி, தொழில் வளர்ச்சி அடையும். சிவன் கோயில்களில், கால பைரவருக்கும் ஜவ்வாது கொண்டு பூஜை செய்வதால், வேலை வாய்ப்புகள் எளிதில் கிட்டும் எனபார்கள்.
ஜவ்வாது மணம் மனதை அமைதிப்படுத்தக்கூடியது.. நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்கிறது.. ஜவ்வாது பொடியை தண்ணீரில் கலந்து லேசாக குழந்தைகளுக்கு உடையில் தடவி விடலாம். குழந்தைகளுக்கு இதை தடவிவிடுவதால், எந்த திருஷ்டியும் அவர்களை நெருங்காது.. நேர்மறையான எண்ணங்கள் அவர்களை சுற்றி பெருகும்.
பேஸ்ட்: மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஜவ்வாது பயன்படுத்தினால், இன்னல்களிலிருந்து முழுமையாக விடுபடலாம். நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும், பேஸ்டாகவும் ஜவ்வாது கிடைக்கிறது.
நல்ல நறுமணங்களில் கடவுள் லட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.. அந்தவகையில், பூஜையறையில் எப்போதுமே சந்தனம், குங்குமத்துடன், இந்த ஜவ்வாதுவையும் கலந்து வைக்க வேண்டும். அல்லது சாமிப் படங்கள் மீது தடவலாம். அல்லது பேஸ்ட்டாக இருந்தால், அதனை தண்ணீரில் கலந்து பூஜை அறையில் தெளிக்கலாம்.
அதேபோல, நல்லெண்ணெய்யில் சிறிது ஜவ்வாதுவையும் சேர்த்து தீபம் ஏற்றுவதால், நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்கும். இந்த ஜவ்வாது விளக்கை ஏற்றுவதற்கு, ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய்யும், ஒரு சிட்டிகை ஜவ்வாது சேர்த்து கலக்க வேண்டும். இப்போது திரியிட்டு தீபமேற்றி, அந்த விளக்குக்கு முன்பு அமர்ந்து உங்களது கோரிக்கைகளை மனம்விட்டு பிரார்த்திக்கலாம்.
பழைய ஜவ்வாது: உங்களுக்கு இன்னல் வரும் சமயத்தில் இதை ஏற்றி வணங்கலாம். அல்லது தினமும் இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றலாம்.. அப்படி தினமும் இந்த விளக்கு ஏற்றுவதாக இருந்தால், மண் அகல் விளக்கை தினமும் ஒரு சுத்தமான துணியில் துடைத்து, புதிய எண்ணெய், புதிய ஜவ்வாது பயன்படுத்த வேண்டும். பழைய ஜவ்வாதை கால்படாத இடத்தில் போட்டுவிடலாம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications