வெற்றிலையின் மகத்துவம்.. கடன் அடைய கொடுத்த பணம் திரும்ப வர மஞ்சள் பரிகாரம்.. 48 நாள் பைரவா பூஜை பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் தொகையை வாங்கிவிட்டாலும் திருப்பி தருவதில் கஷ்டம்.. கடனை தந்துவிட்டு, அதை மறுபடியும் வாங்குவது என்பது படாத பாடாகிவிடும்.. அவசரத் தேவைகளுக்கு பணம் தருகிறோம், ஆனால் உரிய காலத்தில் அதை திருப்பி தராமல் போனால் உறவுகளுக்குள் தேவையில்லாத மன வருத்தமும் மனவேதனையும் அதிகரிக்கும். சிலருக்கு கையில் பணம் இல்லாமல் போகலாம், ஒருசிலர் பணம் இருந்தாலும் அதை திருப்பித்தர மனசே வராது.. எனினும், கடன் தொகையை நம்மிடம் கொண்டு சேர்ப்பதற்கும் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

கங்கை நதி அல்லது ஏரியில் எளிய பரிகார ஒன்று செய்யலாம்.. பட்டு துணி அல்லது சாதாரண துணியில் கங்கை நீர் நிரப்பி, அந்த துணியை கங்கையின் ஓரத்தில் வைத்துவிட்டு, நீங்கள் கொடுத்த பணத்தை மனதில் நினைத்து அந்த துணியை கங்கையில் கரைத்துவிட வேண்டும்.. பௌர்ணமி அன்று இப்படி செய்யும்போது, கங்கை ஆசியின் அருளுடன் கொடுத்த பணம் திரும்ப வந்து சேருமாம்.

Spirituality Money Bhairava puja

வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் கடன் விரைவாக வந்து சேரும். அதேபோல, கடனாக கொடுத்த பணம் திரும்பி வருவதற்கு பைரவர் துணை தேவையாக இருக்கிறது.

பிரம்ம முகூர்த்த வேளை

21 செவ்வாய்க்கிழமை பிரம்ம முகூர்த்த வேளையில், சிவன் கோவிலுக்கு சென்று, பைரவருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வணங்க வேண்டும். பிறகு செவ்வரளி பூக்களை சாற்றி, 2 வாழைப்பழம் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும்..

அதில் ஒரு வெற்றிலையில், நீங்கள் கடன் கொடுத்த நபரின் பெயர், கடன் தொகையை, மஞ்சளை குழைத்து எழுத வேண்டும். இந்த வெற்றிலையை பைரவர் பாதத்திற்கு அருகில் வைத்து விட்டு, "ஓம் வம் பைரவாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மறுநாள் இந்த வெற்றிலையை ஓடும் நீரில் போட்டுவிட்டு, இன்னொரு வெற்றிலையில் எழுதி வைக்கலாம். இதனால் விரைவில் உங்கள் கடன் தொகை வந்து சேரும்.

வெற்றிலை பரிகாரம்

வீட்டில் பைரவர் படத்தை வைத்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து, வெற்றிலை பாக்கு பழம் வைத்து, வெற்றிலையில் கடன் கொடுக்க வேண்டியவர் பெயரை மஞ்சளில் எழுதி பைரவர் பாதத்திற்கு அருகில் வைத்தும் வணங்கிவரலாம். அடுத்த 48 நாட்களுக்குள் கடன் தொகை உங்களை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

ஒரு பேப்பரில் மஞ்சள் தூளை கொட்டி பரப்பிவிட்டு, அதில் நீங்கள் யாருக்கு கடன் தந்தீர்களோ அவர்களது பெயர், கடன் கொடுத்த தொகையை எழுத வேண்டும். கொடுத்த பணம் விரைவில் வந்து சேர வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்ள வேண்டும. பிறகு மஞ்சளை தினமும் நெற்றியில் இட்டு வரலாம். அல்லது நெற்றியில் இட்டுக் கொண்டு, கடன் கொடுத்தவரிடம் பணத்தை திரும்ப கேட்கலாம். அதேபோல, இந்த மஞ்சளை குளிக்கும் நீரிலும் கலந்து குளிக்கலாம்.

செவ்வாய் பகவான்

அதேபோல, வீட்டின் தெற்கு பகுதி செவ்வாய்க்கு உரியப்பகுதி என்பார்கள்.. எனவே, செவ்வாயை நோக்கி 48 நாட்கள் பரிகாரம் செய்யும்போது, அதற்குரிய பல்ன கிடைக்கும். எனவே, செவ்வாய்க்கிழமைகளில காலை நேரத்தில், வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி, 7 விளக்குகளை தெற்கு நோக்கி எரியும்படி ஏற்றிவைத்துவிட்டு, கடன் தொகைக்கு கைக்கு வந்து சேர வேண்டும் என்று பிரார்த்திக்கலாம். ஆனால், தீபம் 1 மணி நேரமாவது எரியும்படி பார்த்துக் வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+