வலம்புரி சங்கு பூஜையறையில் வைக்கலாமா? சங்கினை பெண்கள் தொடலாமா? சங்கடங்களை போக்கும் சங்கு தீர்த்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வலம்புரி சங்குகளை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? வலம்புரி சங்கினை பூஜையறையில் வைக்கலாமா? பெண்கள் வலம்புரி சங்கினை தொடலாமா? வலம்புரி சங்குகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.

மும்மூர்த்திகளில் காக்கும் மகா விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது வலம்புரி சங்கு. ஐஸ்வர்ய லட்சுமியின் அம்சமாகவும் வலம்புரி சங்கு போற்றப்படுகிறது. சங்கின் நடுவில் வருணனும், பின்புறம் பிரம்மாவும், முன்பக்கத்தில் கங்கா தேவியும் சரஸ்வதியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது... எனவே, மங்களகரமான பொருளாக கருதப்படுவதால், சங்கு வழிபாடு அல்லது மத சடங்குகளின் புனிதமான தொடக்கத்தில் இது பயன்படுத்தப்படுகிறது... இதனை வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

spirituality vastu tips

அதிர்ஷ்டம்: அந்த காலத்தில், இந்த சங்கினை, தங்கள் வீட்டின் வாசலில் முன்னோர்கள் பதிப்பித்து வைத்திருந்தனர். இதற்கு காரணம், துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையாது, கண்திருஷ்டியும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

நுண் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டவை சங்குகள். வெளியிலிருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக சென்று, சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே அனுப்பிவிடும். அதனால்தான், வாசற்படியிலேயே இந்த சங்கு ஓரளவு வெளியே தெரியும்படி பதித்து வைத்துள்ளனர்.

மன அழுத்தம்: எனவே புதுமனைகளிலும், வியாபாரம் செய்யும் இடங்களிலும், இந்த சங்கினை பதித்து வைத்தால், கண் திருஷ்டிகள் நீங்கும். வலம்புரி சங்கு வழிபாடு செய்து வந்தால், திருமண தடையும் நீங்கும் என்பார்கள்..

அதேபோல வீட்டின் நான்குமூலையிலும் இந்த சங்கினை வைக்கலாம். வீட்டில் சங்கு வைத்து ஊதுவது, மனக்கவலை மன அழுத்தத்தை குறைக்கும்.. அத்துடன், வீட்டில் சங்கு ஊதுவதன் மூலம் செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

பூஜையறைகள்: பூஜையறைகளில் இந்த வலம்புரி சங்வை வைக்கலாம். ஆனால், அப்படி வைப்பதாக இருந்தால், அடிக்கடி மஞ்சள் நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இந்த சங்கிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பூக்கள் கொண்டு அலங்கரித்து பீடத்தின் மீது வைக்க வேண்டும். இப்படி செய்வதால், குடும்பத்திலுள்ள நிதி சிக்கல்கள் நீங்கும்.

வலம்புரி சங்கு உள்ள இடத்தில் தீய சக்திகள் அண்டவே அண்டாது.. வலம்புரி சங்கினால் நீரோ, பாலோ எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வது கூடுதல் விசேஷமாகும்.. அதேபோல, வலம்புரி சங்கைத் தரையில் வைக்கக்கூடாது. மூன்று கால்கள் கொண்ட ஒரு சிறிய தாங்கு பீடத்தில் வைக்கலாம். அதன் மேல், துளசியோ, வில்வமோ, ஏதாவது ஒன்றை எப்போதும் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.. அதேபோல, இறைச்சி சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது என்பார்கள்..

சங்கு தீர்த்தம்: வலம்புரி சங்கில் சிலர் அரிசி நிரப்பி வைப்பார்கள்.. சிலர் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.. ஆனால், தண்ணீர் வைப்பதாக இருந்தால், அந்த நீரை கண்டிப்பாக மாற்ற வேண்டும். சங்கில் ஊற்றப்படும் தண்ணீரில், சிறிது துளசி இலை அல்லது மல்லிகைப்பூ, அல்லது தாமரைப்பூ இதழ்களை போட்டு வைக்கலாம். பூஜை செய்த இந்த சங்கு தீர்த்தத்தை மறுநாள் குடிக்கலாம் அல்லது வீடு முழுவதும் தெளித்து விடலாம்.

அதேபோல, அரிசி நிரப்பி வைப்பதாக இருந்தால், 15 நாளைக்கு ஒருமுறையாவது அரிசியை மாற்ற வேண்டும். பழைய அரிசியை பறவைகளுக்கு இரையாக அளிக்கலாம். அல்லது இந்த அரிசியை மாவாக அரைத்து, வாசலில் கோலம் போட பயன்படுத்தலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+