வசம்பு வாசம் வீசுதா? கடன் தொல்லை நீங்கி, பணம், மகிழ்ச்சிக்கு உதவும் 3 ஏலக்காய், 3 கிராம்பு பரிகாரம்
சென்னை: எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லையா? கடன் மேல் கடன் தொல்லை அதிகமாகி கொண்டே போகிறதா? கழுத்தை நெரிக்கும் பணப்பிரச்சனைக்கு, எளிய பரிகாரங்கள் பல உள்ளன.. அதிலும் சமையலறையிலுள்ள பொருட்களை கொண்டே இந்த எளிய பரிகாரங்களை நாம் மேற்கொள்ளலாம். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
தினமும் காலை 6.00 மணி மேல் 7.00 மணிக்குள் இந்த ஏலக்காய், கிராம்பு பரிகாரம் செய்யலாம். இதற்கு வெற்றிலையும் தேவைப்படும். வெற்றிலையின் நுனிப்பகுதி கூர்மையாகவும், அதேசமயம், காம்பினை பிரித்து எடுக்காமலும் இருக்க வேண்டும். இப்போது வெற்றிலையை சுத்தம் செய்து, 3 ஏலக்காய், 3 கிராம்பு போன்றவற்றை வைத்து நன்றாக மடித்து கொள்ள வேண்டும்.

ஏலக்காய் பரிகாரம்: பிறகு இதனை வீட்டின் பூஜையறையில் வைத்து நன்றாக பூஜை செய்யுங்கள். அதன் இதனை உங்கள் கண்பார்வை அதிகமாகப்படும் இடத்தில் அல்லது மணி பர்ஸ்ஸில் வைத்து கொள்ளலாம். ஆனால், வெற்றிலை, ஏலக்காய் கிராம்பு இந்த மூன்றையும் தினமும் மாற்றி கொள்ள வேண்டும். இதனால் நாளடைவில் கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும.
அதேபோல, வசம்புவை எடுத்து நெருப்பில் சுட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை பேப்பரில், உங்களது கடன் தொகை எவ்வளவு என்பதை வசம்புவை வைத்தே எழுதி கொள்ள வேண்டும்.
வசம்பு பரிகாரம்: ஒரு கண்ணாடி பாட்டிலில், பச்சை கற்பூரத்தை போட்டு, நீங்கள் எழுதி வைத்திருக்கும் பேப்பரை சுருட்டி, அந்த பாட்டிலில் போட்டுவிட வேண்டும்.. இந்த பாட்டிலை மூடி யாருக்கும் கண்ணில் தென்படாத இடத்தில் வைத்து விட வேண்டும். பிறகு உங்கள் கடனை அடைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் தைரியமாக இறங்க வேண்டும். உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்ததும், இந்த பேப்பரை வெளியே எடுத்து கிழித்து ஓடும் நீரில் போட்டுவிடலாம்.
அதேபோல வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து 11 வாரம் வெல்லம், வெள்ளை மொச்சைக்கொட்டை பயறில் பரிகாரம் செய்யலாம்.. காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துமுடித்து பூஜையறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அமர வேண்டும். 27 மொச்சக்கொட்டை, சிறிது வெல்லம் இரண்டையும் எடுத்து கொண்டு, ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி, அந்த பாத்திரத்தில் இரண்டையும் கலந்து பசு மாட்டுக்கு அல்லது அல்லது பறவைகளுக்கு வைக்கலாம். அல்லது ஓடும் நீரில் கரைக்கலாம்.
ஏலக்காய்கள்: மஞ்சள் தடவிய நூலில், 21 ஏலக்காய்களை ஊசியில் மாலையாக கோர்த்து, வீட்டிலுள்ள மகாலட்சுமி புகைப்படத்துக்கு போடலாம்.. இதையும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வரலாம். இதுபோன்ற பரிகாரங்களை செய்தால் மட்டும் போதாது, கடனை அடைக்கக்கூடிய உங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்து வரவேண்டும்.












Click it and Unblock the Notifications