For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறந்தும் இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்..துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது..ஆன்மீக ரகசியங்கள்

Google Oneindia Tamil News

மதுரை: தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் தவறுகள் நம்மை கஷ்டத்தில் ஆழ்த்திவிடும். சிலர் வீடுகளிலும் கோவிலிலும் தெரியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள். எனவேதான் பூஜை முடிந்த உடன் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை பொறுத்தருள வேண்டும் என்று இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறோம்.

நம்முடைய வீட்டில் பெண்கள் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதே போல கோவிலுக்கு செல்லும் போதும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

எந்த காரியங்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன கஷ்டங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மூச்சுக்காற்று

மூச்சுக்காற்று

ஒரு சிலர் அடிக்கடி பெருமூச்சு விடுவார்கள். பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும். அதே போல ஆணவத்தோடு நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.

பில்லி, சூனியம்

பில்லி, சூனியம்

தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் வீசக்கூடாது அதுவே நமது வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.

முடி, நகம் வெட்டாதீர்கள்

முடி, நகம் வெட்டாதீர்கள்

செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.
செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.

நான்காம் பிறை சந்திரன்

நான்காம் பிறை சந்திரன்

நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். உணவில் அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல்

விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. பெண்கள் கண்ணீர்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும். உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

எலுமிச்சை தீபம்

எலுமிச்சை தீபம்

விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.

 துளசி

துளசி

பெருமாள் கோவிலுக்கு வீட்டில் இருந்து துளசி கொண்டு செல்பவர்கள் அதை அலசி எடுத்துச் செல்லக்கூடாது. துளசி என்பது புனிதமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. எனவே அதன் தெய்வீகத் தன்மை மாறாமல் இருக்க, தண்ணீரில் அலசாமல் அப்படியே பறித்து எடுத்துச் செல்ல வேண்டும். கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது.

 ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்

போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் செல்லக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அந்த சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முழுக்க நினைத்து வலம் வருதல் வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை பேசக்கூடாது.

ஜென்ம நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை

ஜென்ம நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை

நோயாளிகள் முதன்முதலாக மருந்து எடுத்துக்கொள்ளுதல், தம்பதியருக்குத் திருமணம் செய்வித்தல், திருமணம் ஆன பெண்ணுக்கு சீமந்தம் செய்தல், சாந்தி முகூர்த்தம் செய்தல், காது குத்துதல், முடி இறக்குதல் போன்ற காரியங்களை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யக்கூடாது.

English summary
Dont do this mistakes in your house and temple. Some people do some mistakes in their homes and temples without knowing it. That's why we ask God for forgiveness after the puja is done knowingly or unknowingly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X