அதிர்ஷ்டம் நெருங்குது.. இந்த 10 விதமான கனவுகள் உங்களுக்கு வருதா? அப்போ பணமும், செல்வமும் கொட்டுமாமே
சென்னை: கனவு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் இன்றும்கூட பிரதானமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பார்ப்போம்.
கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் உள்ளது.. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறது கனவு சாஸ்திரம்.. ஆனால், அந்த பலன்கள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பில்லையாம்..

கனவு பலன்கள்: உதாரணமாக நள்ளிரவில் 1 மணிக்கு கனவு கண்டால், அதன் பலன் ஒரு வருடம் கழித்தே கிடைக்குமாம். 2 மணிக்கு கனவு கண்டால் 3 மாதத்தில் பலன் கிடைக்கும்.. அதிகாலையில் வரும் கனவுதான் உடனே பலிக்குமாம்.. அந்தவகையில், கனவில் நாம் காணும் உருவங்கள், பொருட்கள், நபர்கள், செயல்கள், இடங்கள், உணர்வுகள் இவைகளை பொறுத்துதான், அவை பலன்களாக கருதப்படுகிறது..
உங்கள் கனவில் எலுமிச்சம் பழத்தை கண்டால் மிகவும் நல்லது.. அதிலும் தனக்கு ஒருவர் தருவதாக கண்டால் சகல பாக்கியங்களும் பெருகும் என்பார்கள்.. சிறு குழந்தைகளை கனவில் கண்டாலும், அல்லது இறந்தவர்களின் சடலத்தை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தமாம்.. இறந்தவருடன் பேசுவதை போல கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
பதவி உயர்வு: நட்சத்திர கூட்டங்களை கனவில் கண்டால் உத்தியோகத்தில் பதவி உயர்வு விரைவில் வரும்.. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிப்பதுடன், பதவி உயர்வும் வரும்..
யானை கனவில் வந்தால் அரசு வேலை கிடைக்கும்.. யானை மாலை போடுவது போல் கனவு கண்டாலும் உத்தியோகத்தில் புரமோஷனும் கிடைக்கும். திருமணமாகாதவர்கள், பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், விரைவிலேயே திருமணம் நிகழும்.. திருமண கோலத்தையே கனவில் கண்டுவிட்டால், சமூகத்தில் மதிப்பு கூடும்..
நதி, குளம்: அதேபோல, நதி, குளம் போன்ற இடங்களில் நீந்துவதைபோல் கனவு கண்டாலோ அதுவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.. கனவில் மழையை பார்த்தால், பணம் மழையை போலவே கொட்டப்போகிறது என்று பொருள்.. கனவில் தாமரை பூவினை பார்த்தாலும் நல்ல அறிகுறியே.. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் விரைவில் நீங்க போகிறது என்று அர்த்தம்.
கோயில்கள் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேற போகிறது என்று அர்த்தமாம். குறிப்பாக, கோயில் நடை திறந்து அதில் செல்வது போல கனவு கண்டால் மிகவும் நல்லது.. நீங்கள் எடுத்து வைக்கும் அத்தனை காரியமும் ஜெயம்தான்.
கோயில் கருவறை: கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு பணவரவு வரப்போகிறது என்று அர்த்தம். கடவுளை கனவில் கண்டால், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். கோபுரத்தை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கை மேலோங்கி செல்கிறது என்று அர்த்தம். கோயில் தெப்பக்குளம் கனவில் வந்தால், கடல்தாண்டி செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும்.
ஆனால், கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கியது போல கனவு வந்தாலோ அல்லது காளி தீபம் கனவில் வந்தாலோ குடும்பத்தில் பிரச்சனைகளும், சிக்கல்களும் வரப்போவதாக அர்த்தமாம்.
விநாயகர் சிலை: விநாயகர் சிலை கனவில் வந்தாலோ அல்லது விநாயகரை வழிபடுவது போல கனவு வந்தாலோ மிகவும் நல்லது.. மங்களகரமானதாக கருதப்படுகிறது.. விநாயகர் குதிரையில் வருவது போல் கனவு வந்தால் உங்களது ஆசைகள் நிறைவேற போகிறது, மங்கள நிகழ்வு நடக்க போகிறது என்றே அர்த்தம். ஆனால், இப்படி வரும் கனவுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ கூடாது என்பார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications