வெற்றிலையின் சக்சஸ்.. அர்ச்சனையில் வாழைப்பழம், தேங்காய் வைப்பது ஏன் தெரியுமா? வாழை மரம் ஸ்பெஷாலிட்டி
சென்னை: அர்ச்சனையில் வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம் போன்றவைகள் கட்டாயம் இடம்பெறுவது ஏன் தெரியுமா?
எந்தவொரு சுபகாரியம் என்றாலும், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் இந்த மூன்றுமே கட்டாயம் இடம்பெற்றுவிடும்.. அர்ச்சனையிலும் இந்த 3 பொருட்களும் கட்டாயம் இடம்பெற்றுவிடும்.. இதற்கெல்லாம் சாஸ்திரங்களில் நிறைய காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

வெற்றிலை: ஆன்மீகத்தில் வெற்றிலையின் பங்கு தவிர்க்க முடியாதது.. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்வதியும், காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த 3 தேவிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள்... இவர்களின் அனைத்து ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெற்றிலையை பூஜைகளில் வைத்து வழிபடப்படுகிறது.
வெற்றிலை மங்களம் மற்றும் செழுமையின் சின்னமாகவும் கருதப்படுகிறது.. வாழ்க்கையிலும் வெற்றி, மங்கலம், செல்வம் ஆகியன நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிலை பாக்கு அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய்: அதேபோல, தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு சுபகாரியம் என்றாலும், அதை மனதில் நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்பார்கள். தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது.. 3 தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், தேங்காய்களை சிறப்புகளை பெற்றுவிடுகிறது.
அதுமட்டுமல்ல, தேங்காயை மூடி மட்டைகளை மாயா மலம் என்பார்கள்.. தேங்காய் நார்கரை "கன்ம மலம்" என்பார்கள்.. அதன் கடினமான ஓடுகளை "ஆணவ மலம்" என்பார்கள். அந்தவகையில், மாயை, கன்மம், ஆணவம் இந்த மும்மலங்களை நீக்கிவிட்டே, வெள்ளை நிற தேங்காய் என்ற நம்முடைய தூய்மையான மனதை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம்.
3வது கண்கள்: வேறு எந்த காய்களிலும் இல்லாத சிறம்பம்சமாக, மூன்று கண்கள் தேங்காயில் இருப்பதால் சிவனின் அம்சமாகவும் கருதப்படுகிறது. தேங்காயிலுள்ள மும்மலங்களை நீக்கி, இறைவனை சரணடைந்தால், நம்முடைய மூன்றாவது கண்ணான அகக்கண்ணும் திறக்கும் என்பதை உணர்த்தவே தேங்காய்கள் அர்ச்சனையில் வைக்கப்படுகின்றன.
பழங்களிலேயே விதையிலிருந்து முளைத்து வராத ஒரே பழம் வாழைப்பழம்... மா, பலா, கொய்யா என எந்த பழமாக இருந்தாலும், அதன் கொட்டையில் இருந்தே பழங்கள் முளைக்கின்றன. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.
பூஜைப்பொருட்கள்: இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.. அதை இறைவனிடம் வேண்டிக்கொள்ளவே, வாழைப்பழத்தை பூஜையில் வைக்கிறோம். காரணம், வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை உணர்த்துவதால்தான், வாழைப்பழம் கடவுளுக்கு படைக்கிறோம்.
அதுமட்டுமல்ல, தேங்காய், வாழைப்பழம் இரண்டுமே மனிதர்களின் எச்சில் படாதவை... முழுத்தேங்காயிலிருந்தே தென்னைமரம் முளைக்கும். வாழைமரத்திலிருந்தே வாழைக்கன்று முளைக்கும்.. எனவே, எச்சில்படாதவை என்பதால், இறைவனுக்கு உகந்ததாக தேங்காயும், வாழைப்பழமும் அர்ச்சனையில் வைக்கப்படுகின்றன.
சுருக்கமாக சொல்லப்போனால், தேங்காய் அறிவின் வெளிப்பாடாகவும், வாழைப்பழம் பிறவிப் பலனின் வெளிப்பாடாகவும், வெற்றிலையை மங்கலத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுவதாலேயே அர்ச்சனைக்கு இந்த 3 பொருட்களையும் பயன்படுத்துகிறோம்.
-
பணப்பெட்டி அருகில் லக்கி பாம்பு வைத்தால் பணம் குவியுமா? 3, 5 தண்டு ரகசியம் என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications