தோள்பட்டையில் பல்லி விழுந்துருச்சா? பல்லி உடம்பில் "இங்கே" விழுந்தால் ஆபத்தா? உடனே என்ன செய்யணும்?
சென்னை: பல்லி நம் மீது தவறுதலாக விழுந்துவிடுவதை வைத்து பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. உடலில் எந்த பாகத்தின்மீது பல்லி விழுந்தால், என்ன பலன்கள் ஏற்படும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்குமாம்.. ஆனால், நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

தலை: தலையில் பல்லி விழுந்துவிடுவது அபசகுணமாக கருதப்படுகிறது. கெட்ட நேரத்தையே பல்லி விழுந்து எச்சரிப்பதாக சொல்வார்கள். அந்தவகையில் தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினருக்கோ அல்லது தெரிந்த நபருக்கு மரணம் ஏற்படலாம்... அதேபோல, உறவுகளுடன் மனஸ்தாபம், எதிர்ப்புகள், நிம்மதியை இழந்துபோவது இப்படியாகவும் நடக்கலாம்.. ஆனால், நேரடியாக தலையில் பல்லி விழாமல், உங்கள் தலைமுடியில் மட்டும் பட்டால், ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்குமாம்.
நெற்றியின் மீது பல்லி விழுந்தால் நல்ல சகுணமாகும்.. குறிப்பாக நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் நன்மைகள் வரும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் பணவரவு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
வலது மார்பு: வலது மார்பின் மீது பல்லி விழுந்தாலும், லாபம் கிடைக்கப்பெறும் என்பார்கள்.. இதுவே இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப்பெறும்.
பல்லி முகத்தில் விழுந்தால், வீட்டிற்கு உறவினர்களின் வரப்போகிறார்கள் என அர்த்தமாகும்... புருவத்தில் பல்லி விழுந்தால், மிகப்பெரிய அரச பதவியிலிருப்போரிடமிருந்து உதவி கிடைக்கும். கண்கள் அல்லது கன்னங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதோ ஒரு செயலுக்காக உங்களுக்கு தண்டனை கிடைக்க போகிறது என்று அர்த்தமாம்.
தொடை பகுதி: தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், பெற்றோருக்கு வருத்தம் ஏற்படும் செயலை செய்ய போகிறீர் என்று அர்த்தம். இடது பக்க கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்ய போகும் காரியம் ஜெயம் உண்டாகும்.
வலது கழுத்தில் பல்லி விழுந்தால் பிறருடன் விரோதம் ஏற்படும். பாதத்தில் பல்லி விழுந்தால் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கட்டாயம் வந்துசேரும். தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், தங்க வைரம் உட்பட நவரத்தினங்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பூஜை: எனினும், பல்லி நம் உடலில் எந்த பாகத்தின் மீது விழுந்தாலும் உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உடனே குளித்துவிட்டு, அருகிலுள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி வைத்து, பல்லி விழுந்ததால் எந்த கெடுதலும் நெருங்க கூடாது என்று மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications