Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகூர் தர்காவில்.. 400 வருஷமாக ஆச்சரியம் கிளப்பும் மீனவ மக்கள்.. அசத்துறாங்களே இஸ்லாமியர்கள்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

நாகை: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இன்றுவரை நாகூர் ஆண்டவர் தர்கா திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாகூர் தர்காவுக்கு எத்தனையோ விதமான சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சீர்வரிசை நடைமுறை. இதன் பின்னணி என்ன?

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

SPIRITUALITY

மத நல்லிணக்கம்: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும், நாகூர் தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.. சர்வ மதத்தினரும் வந்து வழிபடும் தர்காவாக இது திகழ்ந்து வருகிறது..

20 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம் பேதமின்றி பங்கேற்பார்கள். நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக செல்லும் இந்த சந்தன கூட்டின் மீது வழிநெடுகிலும் நின்றிருக்கும் ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபடுவார்கள்.

மீனவ கிராமம்: இந்த திருவிழாவை துவங்குவதற்கு முன்பு, 400 வருடங்களை கடந்தும் இன்றுவரை கடைப்பிடிக்கப்படும் சீர்வரிசை நிகழ்வானது, மத மத நல்லிணக்கத்துக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது.

400 ஆண்டுகளாகவே பாரம்பரிய முறைப்படி மீனவ கிராமங்களிலிருந்து சீர்வரிசை எடுத்துவரப்படுகிறது.. தாம்பூலத்தில் பழங்கள், இனிப்புகள், மலர்கள் போன்றவற்றுடன் பட்டினச்சேரி கிராம மீனவ பஞ்சாயத்தர்கள் மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வருவார்கள். அதாவது கொடியேற்ற விழாவிற்காக, நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் சார்பில் சீர்வரிசை எடுத்து வந்து தர்கா நிர்வாகிகளிடம் இப்படி ஒப்படைப்பார்கள்..

ஆண்டவர் சமாதி: உடனே, நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில், இவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு தந்து மரியாதையும் செலுத்தப்படும்.. பின்னர் மீனவர்களை வரவேற்று பெரிய ஆண்டவர் சமாதியில், அவர்களுக்காகவே சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும்.. மீன்வளம் பெருக வேண்டிய மீனவர்களுக்கு கடலில் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று "துவா" ஓதப்படும்.. இறுதியில், நாகூர் ஆண்டவர் காலடியில் பூக்களை தூவி மீனவ மக்கள் பிரார்த்தனை செய்துவிட்டு போவார்கள்.

இதற்கெல்லாம் காரணம், நாகூர் ஆண்டவரை, முதன்முதலாக நாகூருக்கு வரவழைத்து தங்குவதற்கு இடம் தந்து அரவணைத்தது மீனவ மக்கள்தானாம்.. அதனை போற்றும் விதமாகவே, நாகூர் தர்காவில் இந்து முறைப்படி மீனவ மக்கள் தாம்பூல சீர்வரிசையை கொண்டுவந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

தண்ணீர்: அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி, இந்து சமுதாய மீனவ பெண்கள் தண்ணீரை கொண்டு வந்து ஏர்வாடி தர்காவை சுத்தம் செய்வதும் காலம்காலமாக நடந்து வருகிறது. மீனவ பெண்கள் கடல்நீரை குடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து வந்து தர்காவில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வார்கள்.

அந்தவகையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுத்தும் விதமாகவும் இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அன்பு: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், ஒருசில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் இதயமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இதுபோன்ற "சகோதர உறவுகள்" பறைசாற்றி கொண்டிருக்கின்றன...

மத மாற்றங்களை புறந்தள்ளிவிட்டு மனித மனங்களும் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றன.. தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+