திருநீறு பூசும்போது இதை கவனிச்சீங்களா? விபூதி தயாராவது எப்படி? தப்பித்தவறி இப்படி விபூதியை பூசாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசுமாட்டு சாணத்தை தீயிட்டு கிடைப்பதே திருநீறாகும்.. நீறு இல்லா நெற்றி பாழ் என்று முன்னோர்கள் சொல்ல என்ன காரணம்? விபூதி பூசும்போது கடைப்பிடிக்க முறைகள் என்னென்ன? நெஞ்சுக்குழி மார்பு பகுதி, மூட்டுகளில் திருநீறு பூசலாமா? இதற்கு என்ன காரணங்கள்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

பசு மாட்டு சாணத்தை தட்டையாக தட்டி, அதை வெயிலில் காயவைத்து எடுத்து கொள்வார்கள்.. 3 நாட்கள் நன்றாக காய்ந்ததும், அந்த உலர்ந்த வறட்டியை சில வகையான மூலிகைகள் குறிப்பாக, ஏலக்காய், சூடம் உள்ளிட்டவற்றையும், நெய்யையும் கலந்து நெருப்பில் போடுவார்கள்.. இவை அனைத்தும் நன்றாக எரிந்து கிடைக்கும் சாம்பலே விபூதியாகும்.

Spirituality thiruneeru vibhuti

விபூதியை எப்படி பூச வேண்டும்?

உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி மோதிர விரல் என்பார்கள்.. எனவே, விபூதியை மோதிர விரல் கொண்டு பூச வேண்டும். நடு 3 விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும். கட்டைவிரல் மற்றும் மோதிர விரலை பயன்படுத்தி புருவத்தின் நடுவில் பூச வேண்டும்.

ஆனால், சுட்டுவிரல் மூலமாக விபூதி பூசினால் சேதாரம் வந்து சேருமாம்.. நடுவிரல் கொண்டு விபூதி எடுத்துப் பூசினாலும், போராட்ட வாழ்க்கையே அமையுமாம். சுண்டு விரலைக்கொண்டு விபூதியை எடுத்துப் பூசும்பொழுது, கிரக தோஷங்கள் தாக்கிவிடும் என்பார்கள்.

செய்யக்கூடாத தவறுகள்

வடக்கு கிழக்குமுகமாக நேராக நின்று திருநீறு பூச வேண்டும். அப்படி பூசும்போது, தரையில் சிந்திவிடக்கூடாது.. இடது கை விரலை பயன்படுததி விபூதி பூசக்கூடாது.

திருநீறு பூசும்போது, தலையை கவிழ்த்தும், வாயை திறந்தும், நடந்தபடியும், படுத்தபடியும், விபூதி பூசக்கூடாது.

பெரியவர்களிடம் திருநீறு பெற்றால், அவர்களை வணங்கிவிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். கோயிலில் திருநீறு தந்தால், இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பெற்றுக் கொள்ள வேண்டும். யார் திருநீறு தந்தாலும் வேண்டாம் என்று சொல்லக்கூடாது.

தொண்டை குழி மார்பு

நெற்றியில் விபூதி பூசுவது மாதிரி, தொண்டை குழி, மார்புக்கு மத்தியிலும், காது மடல்களிலும் பூசலாம்.. இதற்கும் காரணங்கள் உண்டு.. தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதியாகும்.. திருநீறு பூசும்போது, உள்வாங்கக்கூடிய இடம் இதுவாகும்..

2 காது மடல்களுக்கு பின்பும் எலும்புகள் உள்ளன.. இந்த எலும்பின் கீழ் பகுதிகளிலுள்ள சிறு குழியில் திருநீறு வைக்கலாம். அதேபோல, ஆண்கள் விபூதியை வலது கால் பெருவிரலிலும் , பெண்கள் இடது கால் பெருவிரலிலும் வைக்கலாம்.

நேர்மறை ஆற்றல் தன்னகத்தே கொண்டது விபூதி.. இதனை நெற்றியில் பூச காரணம் உண்டு.. அதாவது இரு புருவத்துக்கு மத்தியிலுள்ள பகுதிகளில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் இருக்கின்றன.. நெற்றியில் திருநீறு பூசும்போது, நரம்புகள் அனைத்தும் தூண்டப்படும்...

நெற்றியில் பூச காரணம்

மேலும், நெற்றி பகுதியில் மட்டுமே வெப்பம் அதிகமாக காணப்படும். அதனால்தான் காய்ச்சல் வரும்போது, மருத்துவர்கள் நெற்றியை தொட்டு பார்க்கிறார்கள்.. இந்த நெற்றி வழியாக வெப்பம் உள்ளிழுக்கப்படுகிறது.. சூரிய கதிர்களின் சக்தியை இழுத்து, அதிர்வுகளை உள்ளே அனுப்பக்கூடிய செயலை திருநீறு சரியாக செய்கிறது.

தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் உட்பட எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் திருநீறு பூசும்போது, கெட்ட நீர் தேங்கியிருந்தாலும் வெளிவந்துவிடும்.. மூட்டு தொடர்பான வலி, தொந்தரவு இருந்தாலும் விலகிடும்.

அதுமட்டுமல்ல, திருநீரை நீரில் குழைத்து நெற்றியில் தடவினால், தலைப்பகுதியிலுள்ள நீர் வற்றிவிடும்.. அதனால்தான், பச்சிளம் குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, உச்சந்தலையில் விபூதி வைத்து விடுவார்கள். இதனால், குழந்தையின் தலையிலுள்ள ஈரத்தை விபூதி உறிஞ்சிவிடும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+