தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..குடும்பத்தில் வறுமை வீடு தேடி வந்து விடும்
சென்னை: எந்த சூழ்நிலையிலும் முடியை நெருப்பில் கருக விடக்கூடாது என்று சொல்வார்கள். தெரிந்தோ தெரியாமலோ நெருப்பில் முடி கருகினால் ஒருவித வாடை வரும். அந்த வாடை நம்முடைய வீட்டிற்கு ஆகாது. முடியை நெருப்பில் பொசுக்கினால் வளமான வீட்டில் கூட வறுமையை கொண்டு வந்து விடுமாம். எனவே பியூட்டி பார்லரில் முடியை அழகுக்காக பொசுக்குவதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து கொள்ளுங்கள்.

நாம் இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்துகிறோம். அது உயிருள்ளது. வெட்டினாலும் வளரக்கூடியது எனவேதான் இறைவனுக்கு மொட்டையடித்து காணிக்கை செலுத்துகிறோம். நம்முடைய கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள் இறகு, விலங்குகளின் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது.
அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது. ஆனால் அது தீயில் பொசுங்கும் வரும் கருகல் வாடையே அதற்கு சாட்சி.
முடி. நகம், இறகு,ரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும். காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்கும் வாசனையை முகரக்கூடாது
சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள். கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்று சொல்வார்கள். இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே. நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை. இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும். நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் தண்ணீர் தெளித்து விட வேண்டும். எந்த ஒரு தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே இதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் கோழியை,பன்றியை இறைச்சியுண்பதற்காக கொன்று அதன் ரோமத்தை முதலில் தீயில் பொசுக்குவார்கள். பொசுக்கிய பின்னர் அந்த தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூளை அதன் உடல் முழுக்க பூசுவார்கள்.
பிற்காலத்தில் வந்தவர்கள் தீய்ச்சல் வாடை போவதற்காகவும்,உணவின் ருசிக்காகவும் மஞ்சள் பூசுவதாக கருதினார்கள். உண்மையில் கருகல் மூலம் ஏற்படும் தோஷம் நீங்கவே மஞ்சள் பூசியுள்ளனர் முன்னோர்கள்.
ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனைதான் வரும். இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல. இந்த துர்நாற்றத்தை தெரியாமல் கூட முகர்ந்து விடக்கூடாது. இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லாவிட்டால் வறுமை ஏற்படுமாம்.
கொசுவை கூட நாம் மிசின் கொண்டு சுடக்கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. உடம்பில் தீப்புண் பட்ட குடும்பமும் வறுமைக்கு ஆட்பட்டு பின்புதான் மீளும். நாம் சமைக்கும் போது கருவாடு. இறைச்சி என எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வருமாம்.

கொசுவை கொல்ல எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது. இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து கருகி மரணமடைகிறது. இதனால் நம் செல்வமும் குடும்பத்தில் உள்ள சுகமும் படிப்படியாக குறைந்து கொண்டே வருவதை தெரிந்து கொள்ளலாம்.
மிகப்பெரிய ஹோட்டல்களில் ஈ,கொசு தொல்லை தீர எலக்ட்ரானிக் விளக்கு வைத்திருப்பார்கள். அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும். அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும். இது அந்த நிறுவனத்தையே வறுமையில் தள்ளிவிடுமாம்.
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம் படிந்து இருக்கும். மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும். அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்.
தலையணையை நெருப்பில் போடக்கூடாது. இதனால் வறுமை அதிகரிக்கும். நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது. போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு. அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மிகப்பெரிய வறுமையில் சிக்க நேரிடும் என முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.
இன்றைய நவநாகரீக உலகத்தில் அழகு நிலையங்களில் முடியை அழகுபடுத்துகிறேன் என்று சொல்லி நெருப்பில் முடியை பொசுக்குவார்கள். சில காலம் கழித்து அவர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு சிக்கலாக இருக்கும் என்பதை கண் கூடாக பார்க்கலாம். எனவே எந்த காலத்திலும் தலைமுடியோ நம் உடம்பில் உள்ள முடியோ கருகாமல் பார்த்துக்கொள்வோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications