ஆனந்தம் விளையாடும் வீடு..அன்பிருந்தால் அன்னை மகாலட்சுமி வாசம் செய்வாள்..சில்லறையை சிதற விடாதீர்கள்
சென்னை: வீட்டில் சில்லறை நாணயங்களை ஒருபோதும் ஆங்காங்கே சிதற விடக்கூடாது. நாணயங்கள் கீழே தரையில் தூக்கி வீசக்கூடாது. தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் தவறு நமக்கு வறுமையை கொண்டு வந்து விடும். அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும். அதே போல மகாலட்சுமிக்கும் நாணய அர்ச்சனை மிகவும் பிடிக்கும். 5 ரூபாய் நாணயம் கொண்டு அர்ச்சனை செய்தால் அன்னை மகாலட்சுமியின் மனம் மகிழ்ச்சியடையும்.

சிலர் சண்டை போடும் போது உணவையோ, பணத்தையோ தூக்கி வீசுவார்கள். சிலர் ஆணவத்தில் பணத்தை கிழிப்பார்கள். இனிமேல் ஒருபோதும் அந்த தவறை செய்யாதீர்கள். குடும்பத்தில் வருமான தடை, தொழில் பாதிப்புகள், புதிய தொழில் துவங்கியிருந்தால் அதில் நஷ்டங்கள், இழப்புகள் போன்றவை ஏற்படக்கூடும் எனவே நாணயங்களை கண்டிப்பாக தூக்கி எறிய கூடாது.
சண்டை இல்லாத வீட்டில்தான் மகாலட்சுமி தங்குவாள். எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன் என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. அதற்கு உதாரணமாக ஒரு கதை ஒன்று உள்ளது.
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, 'பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.
நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது' என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர்.
'நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்' என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், 'அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்' என்று கூறினாள். இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், 'அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது' என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி 'மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்' என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள். நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள். தேவையில்லாமல் கண்ணீர் விட்டு அழுவதை தவிருங்கள்.
சில்லறை நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ரூபாய் நோட்டுகளை விட உலோகத்தால் ஆன இந்த நாணயங்கள் மகாலட்சுமிக்கு ரொம்பவும் இஷ்டமான பொருளாக இருக்கிறது. இதன் ஓசை எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் குபேர வாசம் உண்டாகும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
சில்லரை நாணயங்கள், கொலுசு சத்தம், மெட்டி தரையில் படும் ஓசை, வளையல் ஓசை, பூஜை மணி அடிக்கும் ஓசை, மழலை சத்தம், பெண்களின் சிரிப்பு சத்தம் இவை எல்லாம் ஒரு வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் சத்தங்கள் ஆகும். எந்த வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.
மணம் வீசும் மலர்கள்.. நறுமணம் வீசும் இடங்களிலும் அன்னை மகாலட்சுமி வாசம் செய்வாள். நாம் பேசும் வார்த்தைகள் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும். முடியாது நடக்காது என்று ஒருபோதும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உதவும் எண்ணத்தோடு செய்யும் செயல்களும் அன்னை மகாலட்சுமியின் அருளை நமக்கு கிடைக்கச் செய்யும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications