பெண்களே! பூஜை சாமான்களை தேய்க்கும் போது.. கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
சென்னை: பூஜை சாமான்களை கழுவும் போது தப்பி தவறியும் ஒன்றை செய்துவிடக் கூடாது. அதை நினைவில் கொள்ளுங்கள்.
பூஜை, புனஸ்காரம் என இருந்தால் அந்த வீடே நன்கு செழிப்பாக இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என சொல்வார்கள். தினந்தோறும் காலையும் மாலையும் விளக்கேற்றி சுவாமியை வழிபட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். குலத் தெய்வம் அருள் கிடைக்கும். இதனால் மற்ற தெய்வங்களின் அருளும் கிடைக்கும். விளக்கேற்றும் போது விளக்கு எரியும் இடத்தில் குங்குமப் பொட்டு வைத்தல் கூடாது.

நல்ல சகுனம்
ஏனென்றால் நல்ல சகுனத்தை குறிக்கும் குங்குமம் எரிந்தால் வீட்டுக்கு ஆகாது என்பார்கள். அது போல் விளக்கை தெற்கு நோக்கி ஏற்றுதல் கூடாது. அது போல் சுவாமி படங்களுக்கு அருகில் இறந்தவர்களின் படங்களை கிழக்கு நோக்கி வைக்கக் கூடாது. எப்போதும் இறந்தவர்களின் படங்களை வடக்கு நோக்கி பார்க்கும்படியாக வைத்தல் வேண்டும்.

செவ்வாய், வெள்ளி
பொதுவாக வீடுகளில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதுண்டு. இதற்காக சிலர் திங்கள்கிழமையோ அல்லது வியாழக்கிழமையோ பூஜை பாத்திரங்களை தேய்த்து வைப்பர். இது சரியான முறை. ஆனால் செவ்வாய் அல்லது வெள்ளி அன்று பூஜை பாத்திரங்களை தேய்க்கக் கூடாது.

பூஜை பாத்திரம்
பூஜை பாத்திரத்தை கழுவும் போது அந்த பாத்திரங்களை தரையில் வைக்கக் கூடாது. கழுவிய பிறகு ஒரு தாம்பூல தட்டிலோ அல்லது எச்சில் படாத தட்டிலோ வைக்க வேண்டும். பிள்ளையார் மாடத்தை தேய்த்து கழுவ அதிலிருக்கும் சாமி சிலைகளை எச்சில் படாத ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். அவற்றையும் கீழே வைக்கவே கூடாது.

ஈரம் இருக்கவே கூடாது
அது போல் அந்த பூஜை பொருட்களில் ஈரம் இருத்தல் கூடாது. ஒரு சுத்தமான காட்டன் துணியில் துடைத்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாம்பூல தட்டில் வைத்து வெயிலில் காயவைக்கலாம். அது போல் செவ்வாய், வெள்ளியில் சுவாமி கும்பிட முதல் நாளே விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தல் கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர் கடனாக வாங்கக் கூடாது. அந்த பொருட்களை வீட்டில் இல்லாமல் சுத்தமாக துடைத்தும் வைக்கக் கூடாது.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications