வாசலில் வெற்றிலை தோரணம்! இழந்த சொத்து முதல் மகிழ்ச்சி வரை மீண்டும் பெற உதவும் வெற்றிலை பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகத்தில் வெற்றிலையின் முக்கியத்துவம் என்ன? வெற்றிலைகள் இல்லாமல் சுபகாரியங்கள் நடைபெறுவதில்லையே ஏன் தெரியுமா? பூஜைகளிலும், பரிகாரங்களிலும் வெற்றிலையின் முக்கியத்துவம் என்ன? வெற்றிலையை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? வெற்றிலை பரிகாரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? இதனை எப்படி செய்ய வேண்டும்? இவைகளை எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

மருத்துவ ரீதியாக பல்வேறு பயன்களை வெற்றிலை தருகிறது.. ஆன்மீகத்திலும் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெறுகிறது.. குறிப்பாக, பூஜைகளிலும், பரிகாரங்களிலும் வெற்றிலையின் பங்கு ஏராளம் என்றே சொல்லலாம்.
கனவு சாஸ்திரம்
கனவு சாஸ்திரத்திலும் வெற்றிலை பற்றி சொல்லப்பட்டுள்ளது.. உதாரணத்துக்கு வெற்றிலையை வாங்குவது போல் கனவு கண்டீர்கள் என்றால் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று அர்த்தம். திருமணம் நிச்சய தாம்பூலம் வைபவத்தை கனவில் காண்பது இன்னும் நல்லது என்பார்கள்.. திருமணம் ஆகாதவர்களும் இதனை கனவில் கண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடந்துவிடுமாம்
சுபகாரியங்கள் எதுவும் வெற்றிலை பாக்கு இல்லாமல் நடைபெறுவதில்லை.. காரணம், வெற்றிலை நுனியில் லட்சுமி, மத்தியில் சரவஸ்வதி, வெற்றிலை காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. வெற்றிலையை பயன்படுத்தும்போது 3 தேவிகளுமே ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்..
வெற்றிலை பரிகாரம்
வாழ்க்கையிலும் வெற்றி, மங்கலம், செல்வம் ஆகியன நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும் வெற்றிலை பாக்கு அர்ச்சனைக்கு வைத்து வழிபடுகிறார்கள்... அதேபோல பரிகாரத்திலும் முதன்மையானதாக வெற்றிலையே உள்ளது..
சொத்துக்களை மீட்கவும், மனநிம்மதியை வீட்டில் பெருக்கவும், இந்த வெற்றிலை பரிகாரம் உதவுகிறது..குடும்ப உறுப்பினர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் வறுமை பீடித்தாலோ அதற்கும் இந்த வெற்றிலை பரிகாரமே பயன்படுகிறது.
பச்சை கற்பூரம் பூஜை
அந்தவகையில் 2 எளிமையான பரிகாரங்கள் உள்ளன.. முதலாவதாக, ஒரு தட்டில் வெற்றிலை, அதன்மீது பச்சை கற்பூரம் வைத்து, ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை பச்சை கற்பூரத்தில் விட வேண்டும். பூஜையறையில் இந்த வைத்து பச்சை கற்பூரம் தீபம் ஏற்ற வேண்டும்.. இப்போது உங்கள் மனதிலுள்ள குறைகளை வேண்டிக் கொண்டால், விரைவில் அது நிறைவேறும்.
அதேபோல புதிதாக தொழில் தொடங்குவது, அல்லது புதிதாக ஒரு செயல் செய்வதானால் அதற்கு முன்பு, கடையில் புதிதாக வெற்றிலைகளை வாங்கி கொள்ள வேண்டும். இதனை எண்ணிப்பார்த்தால், ஒற்றைப்படையில் வெற்றிலை வந்தால், உங்களது முயற்சிகள், செயல்கள் அத்தனையும் வெற்றி பெறும்.
இரட்டைப்படை வெற்றிலை
இரட்டைப்படையாக வெற்றிலைகள் வந்துவிட்டால், அந்த காரியம் தடைபட்டு நடக்கும் என்பார்கள். இரட்டைப்படையில் வெற்றிலை வந்தால், அதிலிருந்து ஒரு வெற்றிலை எடுத்து 3 மிளகு வைத்து நூலில் கட்டி பூஜையறையில் வைக்க வேண்டும். 3 நாள் கழித்து, அந்த வெற்றிலையை ஓடும் நீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிட்டால் போதும். உங்களது காரியங்கள் வெற்றியை தருமாம்.
அதேபோல வெற்றிலைகளை புதிதாக வாங்கி வீட்டு வாசலில் கட்டிவிடலாம்.. ஆனால் காய்ந்து போகவிடக்கூடாது. அடிக்கடி வெற்றிலை மாற்றி வரவேண்டும். இதனால் குடும்பத்தில் துஷ்ட சக்திகள் அண்டாது.. புதன்கிழமைகளில் வெற்றிலை, ஏலக்காயை கோயிலிலுள்ள விநாயகருக்கு தர்ப்பணம் செய்வதாலும் தடைகள் நீங்கும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+