Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ருத்ராட்சத்தை தங்க செயினில் அணியலாமா? பூஜையறையில் புத்தர் சிலை? உண்டியலில் தாலி கயிறு போடலாமா? அடடே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாஸ்துவில் சிறுகுறை இல்லாமல் இருந்தாலே, அந்த குடும்பம் சுபீட்சம்பெறும்.. செல்வம், ஆரோக்கியம், புகழ் போன்றவை சேரும்.. அந்தவகையில், வீட்டிற்குள் உபயோகிக்கும் பொருட்களில் என்னென்ன பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதையெல்லாம் வாஸ்துவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. அதேபோல, ஒருசில வழக்கங்களில் சில சந்தேகங்கள், குழப்பங்கள் வரலாம்.. உதாரணத்துக்கு தாலி கயிற்றினை கோயில் உண்டியலில் போடலாமா? புத்தர் சிலைகளை பூஜையறையில் வைக்கலாமலா? என்பது போன்ற சந்தேகம் வரலாம். இதுகுறித்து மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தாலி கயிறு மாற்றுவதற்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியம்.. அப்படி புதிய கயிறு மாற்றும்போது, பழைய கயிற்றை என்ன செய்வது?

Spirtuality Gold Rudraksha Buddha Statue Thali Kayiru

பழைய தாலி கயிறு

பழைய தாலி கயிற்றினை, செடி, கொடிகள் இருந்தால், அவைகளில் கட்டிவிடலாம். அல்லது அருகிலுள்ள கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் குப்பையில் தூக்கி போடக்கூடாது.

அதேபோல, கோயில் உண்டியலில் தாலியை காணிக்கையாக போடுவதும் தவறாகும்.. வேண்டுதலுக்காக இருந்தாலும், புதிய தாலியை வாங்கி உண்டியலில் சேர்ப்பதே சிறந்த முறை என்கிறார்கள்.. ஏனென்றால், கடவுளை சாட்சியாக வைத்து, கணவன் கையால் கட்டப்பட்ட தாலியை, உண்டியலில் சேர்ப்பது சரி கிடையாது என்கிறார்கள் பெரியவர்கள்.

பூஜையறையில் புத்தர் சிலை

அதேபோல, புத்தர் சிலையை வீட்டில் வைப்பதால், அமைதி, நேர்மறை ஆற்றல், நல்லிணக்கம் போன்றவையும் வீட்டிற்குள் நுழையும் என்பது நம்பிக்கையாகும்.

மேலும், அமைதி, அறிவொளியை பிரதிபலிக்கக்கூடியது இந்த புத்தரின் சிலையாகும்.. ஆன்மீக உணர்வை மேம்படுத்தக்கூடியதுடன், சமாதானத்தையும் உண்டுபண்ணக்கூடியவை. இது வாழ்வின் செழிப்பையும், நிதி நிலைமையையும் சீராக்குகிறது..

எனவே, வெள்ளை, மஞ்சள் , பழுப்பு நிற புத்தர் சிலைகளை வீட்டில் வைக்கலாம்.. நீல நிற சிலைகள் ஆரோக்கிய குறைபாட்டிலிருந்து மீட்கும்.. அதுமட்டுமல்ல, ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா, இயேசுபிரான் போன்று புத்தரும் மனிதராக வாழ்ந்து இறைநிலையை அடைந்தவர் என்பதால், புத்தர் சிலையை பூஜையறையில் வைத்து வணங்கலாம்..

தங்கத்தில் ருத்ராட்சை

அதேபோல, ருத்ராட்சத்தை தங்கத்தில் அணியலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.. தங்கத்தில் மட்டுமல்ல, வெள்ளியில் கூட அணியலாம். ஆனால் கருப்பு கயிற்றில் மட்டும் அணியக்கூடாது என்பார்கள்..

எப்போதுமே ருத்ராட்சையை அணிவதாக இருந்தால், அதற்கு முன்பு, பெரியவர்களின் ஆசியுடன் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான நீரில் அல்லது எலுமிச்சம் சாற்றினை வைத்து சுத்தப்படுத்த வேண்டும். பிறகு விபூதியில் ஒருநாள் முழுவதும் போட்டு வைத்திருந்து, மறுநாள் சிவன் கோயிலில், சிவனின் பாதங்களில் வைத்து எடுத்து, குரு அல்லது பெரியோர்களிடம் தந்து அணிந்து கொள்ளலாம். அதிலும், சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற கயிறு அணிவது கூடுதல் சிறப்பாகும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+