Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கம் மாசி திருவிழா: நெல்லளவு கண்டருளி..தெப்பத்தில் உபய நாச்சியார்களுடன் வலம் வந்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா முன்னிட்டு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் மாத மாத தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.

Srirangam Masi Theppathruvizha: Namperumal crawled with Upaya Nachiyars..Govinda slogan

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

Srirangam Masi Theppathruvizha: Namperumal crawled with Upaya Nachiyars..Govinda slogan

3ஆம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ஆம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ஆம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Srirangam Masi Theppathruvizha: Namperumal crawled with Upaya Nachiyars..Govinda slogan

7ஆம் நாளான புதன்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த ஆலயத்தில் 7 மாதங்களில் நெல்லளவு கண்டருளுவார் நம்பெருமாள். புதன்கிழமை இரவு நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நம்பெருமாள் எழுந்தருளினார். இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு. செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்க்க தன்னுடன் இரண்டு தேவியரையும் சேர்த்தழைத்துக் கொண்டு வருகிறார் நம்பெருமாள்.

Srirangam Masi Theppathruvizha: Namperumal crawled with Upaya Nachiyars..Govinda slogan

பட்டு வேஷ்டி,அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி - பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வந்தார் நம்பெருமாள். ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலு கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டது.

Srirangam Masi Theppathruvizha: Namperumal crawled with Upaya Nachiyars..Govinda slogan

செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்விக்கப்படுகிறது. கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளந்து கொட்டி பெருமாளுக்கு கணக்கு கூறுகிறார். 'திருவரங்கம்' எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து 'பெரிய கோயில்' எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, 'நிரவி விட்டு அள' என்று. ஸ்தானி கர்தான் குரல் கொடுக்கிறார். 'சரியாக அளந்து போடு' என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.

அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்துதான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக் கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள். உலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். மரக்கால் மூலம் நெல் அளந்து கூறப்படுகிறது. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி. எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் நெல் அளவை கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கொட்டாரத்தில் எழுந்தருளி நெல்அளவை கண்டருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர், இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளி மைய மண்டபம் சென்றடைந்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

9ஆம் திருநாளான இன்று காலை பந்தக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+