ஸ்ரீரங்கம் பூபதி திருநாள்.. தை தேரோட்டம் கோலாகலம்.. விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
ஸ்ரீரங்கம்: பூபதி திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் இன்று காலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா.. ரங்கா.. கோவிந்தா என முழக்கமிட்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குறியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயமாகும். இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமவதாரம் 7வது அவதாரமாகும். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. நாழிகேட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம்,கார்த்திகை கோபுரம்,ரங்கா ரங்கா கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் 1, தெற்கு கட்டை கோபுரம்-2 ராஜகோபுரம்.12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்,உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி சாலி அலங்காரம். கொடுக்கப்பட்டுள்ள 16 ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

ஸ்ரீரங்கநாதருக்கு 7 நாச்சியார்கள் உள்ளனர். ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார்,கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் விருப்பன் திருநாள்,வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள், பாரிவேட்டை, ஆதி பிரம்மோத்சவம் ஆகிய ஏழு உற்சவங்களில் மட்டும் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறும். முக்கிய விழாக்களில் தைத்தேர் திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா கடந்த வாரம் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கடந்த 19ஆம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 20ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 31ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
ஏழாம் திருநாளன்று நெல் அளவு கண்டருளினார். நேற்றைய தினம் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூபதி திருநாள் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதனையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 4.30 மணிக்கு வந்தடைந்தார்.
காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா..ரங்கா என பக்தி முழக்கமிட்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருத்தேர் நான்கு உத்திர வீதிகளில் ஆடி அசைந்து வலம் வந்ததை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாளைய தினம் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் 26ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications