சூடிக்கொடுத்த சுடர்கொடி.. ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவிழா கோலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாளின் அவதாரதினமான ஆடிப்பூரம் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவினை முன்னிட்டு நேற்றிரவு சேனை தலைவர் புறப்பாடு நடைபெற்றது.
ஆண்டாள் அவதார தலம்: கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படுகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது.

சூடிக்கொடுத்த சுடர்கொடி: மகாவிஷ்ணுவின் 12 ஆழ்வார்களின் ஒருவரான ஆண்டாள் அவதரித்தது திருஆடிப்பூரம். பூமாதேவியின் அம்சமாக துளசி செடியில் அவதரித்த ஆண்டாளை வளர்த்தவர் பெரியாழ்வார். இறைவனுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து பின்னர் இறைவனுக்கு கொடுத்த ஆண்டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாக போற்றுகின்றனர் பக்தர்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம் கொடியேற்றம்: இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்றைய தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தினசரியும் ஆண்டாள், ரங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நடைபெறும். தினசரியும் பல்வேறு மண்டங்களிலும் எழுந்தருளுவர். வருகிற 18ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆடிப்பூரம் தேரோட்டம்: 20ஆம் தேதி சயன திருக்கோலத்தில் ஆண்டாள், ரங்க மன்னார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சயன மண்டபத்தில் சயனிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 22ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ரங்க மன்னர் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளுகின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பரிசு: பூவுலகில் துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார் ஆண்டாள் நாச்சியார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்ட திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications