ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்.. களைகட்டப்போகும் தேரோட்டம்.. ரங்கநாதரின் பரிசு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாளின் அவதாரதினமான ஆடிப்பூரம் விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பூமாதேவியின் அம்சமாக போற்றப்படும் ஆண்டாளின் அவதார தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடிப்பூரத் தேரோட்டத்திற்காக தயாராகி வருகிறது ஸ்ரீவில்லிபுத்தூர்.
மகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் 12 ஆழ்வார்களின் ஒருவரான ஆண்டாள் அவதரித்தது திருஆடிப்பூரம். பூமாதேவியின் அம்சமாக துளசி செடியில் அவதரித்த ஆண்டாளை வளர்த்தவர் பெரியாழ்வார்.

இறைவனுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து பின்னர் இறைவனுக்கு கொடுத்த ஆண்டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாக போற்றுகின்றனர் பக்தர்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆண்டாள் கோயில் தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடக்கும்.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. தினசரி ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நடைபெறும். பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இதை தொடர்ந்து பல்வேறு மண்டங்களிலும் எழுந்தருளுவர். தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஆண்டாள் கோயில் தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பூவுலகில் துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார் ஆண்டாள் நாச்சியார்.
தேரோட்டத்தையொட்டி, திருவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும், நகராட்சி சார்பில் செய்து தருவதற்கு, நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் மற்றும் ஆணையாளர் ராஜமாணிக்கம் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தேரோட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தவும், வருகின்ற பக்தர்களுக்கு அனைத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையிலும், ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேரோட்ட திருவிழா 14ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடக்கிறது. ஆண்டாள், ரங்க மன்னாரை தரிசிக்க வெளிநாடுகளில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் ஊருக்கு வரத் தொடங்கி விட்டனர். தேரோட்டத்தையொட்டி திருவில்லிபுத்தூர் களைகட்டத் தொடங்கியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications