பீரோவுக்கு அடியிலே தம்மாதுண்டு இதை வைங்க.. பீரோவுக்குள் புளியங்குச்சியா? அதிர்ஷ்டம், பணம் கொட்டுமாம்
சென்னை: வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருக்க, நாள்பட்ட நோயிலிருந்து விடுபட, குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்க, வீட்டிலுள்ள சில பொருட்களை உரிய திசையில் வைத்தாலே போதும்.. அதேபோல, சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்கக்கூடாது.. சில பொருட்களை காலியாகவும் போட்டு வைக்கக்கூடாது.. அவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வீட்டில் எப்போதுமே, அரிசி, பருப்பு பாத்திரங்களை காலியாக வைத்திருக்கக்கூடாது.. மகாலட்சுமியின் அருள் நிரந்தரமாக கிடைக்க, தானியங்கள் குறைவின்றி இருக்க வேண்டும்.. உப்பு பானையிலும் உப்பு நிரம்பியிருக்க வேண்டும். இதனால், செல்வ நிலை வற்றாமல் இருக்கும்.

காலியாக விடாதீங்க
அதேபோல, மஞ்சள் நிற பர்ஸ் செல்வத்தை ஈர்க்கும் என்பார்கள்.. மணி பர்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை காலியாகாமல், ஓரிரண்டு ரூபாய்களை வைத்திருக்க வேண்டும். குளியலறை பக்கெட்டுகளை காலியாக வைத்திருக்கக்கூடாது.. தண்ணீர் நிரம்பியிருப்பது, நிதி நிரம்பியிருக்க உதவுமாம். சமையலறை குடங்கள், பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் இப்படி அனைத்திலுமே சிறிது நீர் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
பீரோ அடியில் வைக்கப்படும் பொருள்
அதேபோல, பீரோவில் வைக்கப்படும் வாசனை பொருட்களுக்கும் பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.. பொதுவாக, வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்து பீரோ வைக்கலாம். அதாவது, பீரோ வடக்கு நோக்கி திறக்கப்பட வேண்டும்.. பீரோவைத் திறக்கும்போது நம்முடைய முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.. தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ வைத்திருந்தால் பணம் பெருகும்..
பீரோவுக்குள் மகாலட்சுமி படம் பொறித்த தங்க நாணயம், குபேரனின் சிலை வைப்பதால், பணவரவு பெருகும். தங்கத்தகடு கலந்த பிரமிடு, வெள்ளி பிரமிடுகளையும், புதன், வியாழன் வெள்ளி போன்ற கிழமைகளில் வைக்கலாம்.
பீரோவுக்கு அடியில் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பு, எலுமிச்சம் பழம் வைப்பதால், திருஷ்டி, துர்சக்தி நீங்கிவிடும். இதை வாரம் ஒருநாள் மாற்றிவிட வேண்டும். அதேபோல, பீரோவுக்கு கீழே 4 மூலைகளிலும் படிகார துண்டுகளை வைப்பதும் அதிர்ஷ்டம்..
வாசனை பொருட்கள் - பீரோ
அதேபோல, பீரோவில் வாசனை பொருட்களை வைக்கலாம்.. சிறிய கிண்ணத்தில் வெந்தயம், பச்சை பயிறு, பச்சை கற்பூரம் மூன்றையும் கலந்து அல்லது ஒரு துணியில் வெந்தயம் சிறிது கட்டி வைக்கலாம்.. பணத்தை ஈர்க்கக்கூடியதில், வெந்தயத்துக்கு முதல் இடம் இருக்கிறதாம்..
அதேபோல, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பச்சை கற்பூரம், சோம்பு, போன்றவற்றையெல்லாம் சிறிய தட்டில் வைப்பதால், பண ஈர்ப்பு அதிகரிக்கும்.. அதேபோல, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், புளியங்குச்சி பீரோவில் வைக்கலாம்.. இதனால் எளிதில் கடன் தீரும் என்பார்கள்.












Click it and Unblock the Notifications