மறந்தும் வீட்டில் இதை செய்துடாதீங்க.. இந்த பொருட்களை சரியான திசையில் வைங்க.. பணம் கொட்டுமாம்: வாஸ்து
சென்னை: நாம் அன்றாடம் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் வாஸ்து குறைபாடுகள் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.. சின்ன சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியம்கூட, வீட்டிற்குள் வறுமையை கொண்டுவந்துவிடலாம். இதைதான் வாஸ்து சாஸ்திரங்களில் தெளிவாக விவரித்துள்ளார்கள். இதில் ஒருசிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்து மதத்தில் வழிபாடுகள், விரதங்கள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.. எனினும், வீடுகளில் சிலர் பூஜைகளை சரி செய்வதில்லை.. இந்த பூஜைகளை சரிவர செய்து வந்தாலே, நிதி நெருக்கடியிலிருந்து மீண்டுவிடலாம் என்கிறார்கள்.

சூரிய உதயம்: அதேபோல, சூரிய உதயத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ விழித்துக்கொள்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தினந்தோறும் சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிப்பது, நேர்மறை ஆற்றலை குடும்பத்துக்குள் கொண்டு வருகிறதாம்..
அதேபோல, வியாழன் மற்றும் ஏகாதசியில் பலர் முடி மற்றும் நகங்களை வெட்டுகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வது வாஸ்து சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது. இதனால், வீட்டில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல, வீட்டிலுள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக தழைக்க வேண்டுமானால், வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். பொதுவாக, வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசையாகும்.. குபேரன் ஆளும் இந்த திசையில் கடிகாரம் மாட்டினால் பொருளாதார நிலை உயரும்.
கடிகாரங்கள்: கிழக்கு மற்றும் வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம், ஆனால் தெற்கு சுவரில் கடிகாரத்தை மாட்டக்கூடாது.
சேதமடைந்த மற்றும் அறுந்துபோன செருப்புகளை வீட்டில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவற்றை உடனடியாக தூக்கி போட்டுவிட வேண்டும். செருப்புகளை தெற்கு அல்லது மேற்கு திசையில் தான் கழற்றி வைக்க வேண்டும். கிழிந்த மற்றும் பழைய துணிகளை வீட்டில் வைக்கக் கூடாது. இதுவும் வீட்டிற்குள் எதிர்மறையான ஆற்றலை கொண்டு வந்துவிடும்.
விஷப்பூச்சிகள்: சுத்தமில்லாத வீட்டிற்குள் மகாலட்சுமி வரமாட்டாள்... எனவே, தினமும் பெருக்கி சுத்தப்படுத்த வேண்டும்.. விஷ பூச்சிகள், கரையான்கள் வீட்டுக்குள் சேரக்கூடாது. சூரியன் மறைந்த பிறகு, வீட்டை பெருக்கி வெளியில் தள்ளக்கூடாது.
எப்போதுமே ஈர துணிகளை வீட்டில் எந்த அறைகளிலும் ஊறவைத்திருக்க கூடாது. வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் சொட்டக்கூடாது. இப்படி தண்ணீர் சொட்டுவது வீட்டில் நிதி நெருக்கடியை சந்திக்க செய்துவிடும். பழுதடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள், உபயோகமில்லாத பொருட்களை வீட்டிற்குள் வைக்கக் கூடாது.
காலி பாத்திரம்: கிச்சனில் எப்போதுமே உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை காலியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைக்கக்கூடாது. வீட்டில் வளர்க்கப்படும் பூக்கள் வாடிவிடாமல் இருக்க வேண்டும். வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளைத் தீர்க்கும். அதேபோல, ஒற்றைக்கண் தேங்காயை வீட்டின் முன்புறம் மஞ்சள் துணியில் கட்டித் தொங்கவிட்டு பூஜை செய்தாலும், லட்சுமியின் அருள் குடும்பத்திற்கு கிடைக்கும்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications