பூசம் இன்று பிறந்தாலும் பவுர்ணமி நாளை இரவுதான் பிறக்குது! தைப்பூச விரதம் எப்போது இருக்கணும்?
சென்னை: தைப்பூசத் திருவிழா நாளை அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்து முருகனை வழிபடுவார்கள்.
முருகனுக்கு மிகவும் விசேஷமான தைப்பூசம் என்பது தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக் கூடியதாகும். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை வருகிறது.

இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தனது யூடியூப் சேனலான ஆத்ம ஞான மையத்தில் கூறியிருப்பதாவது: முருகனுக்கு விரதம் இருந்து வழிபடக் கூடிய திருநாள்தான் தைப்பூசம். தைப்பூசத்தையொட்டி தொடர் விரதம் இருக்க வேண்டுமா, இல்லை தைப்பூசத்தன்று மட்டும் விரதம் இருந்தால் போதுமானதா என நிறைய பேருக்கு கேள்வி இருக்கும். அவர்கள் அவரவர் வேண்டுதலை பொறுத்து விரதம் இருக்கலாம்.
தைப்பூச விரதம் என்பது மாலை அணிந்து கொண்டு பாதயாத்திரையாக செல்லக் கூடியவர்கள் 30 நாட்களோ இல்லை 40 நாட்களோ விரதம் இருப்பார்கள். பாத யாத்திரை போகாதவர்கள் ஒரே ஒரு நாள் மட்டும் விரதம் இருக்கலாம். பழனிக்கு பாதயாத்திரை செல்லக் கூடியவர்கள் கார்த்திகை மாதமே மாலை அணிந்து கொண்டு மார்கழி முழுவதும் விரதத்தை தொடர்ந்து தை மாதம் முருகனை வழிபடுவார்கள்.
தைப்பூசத்தன்றுதான் முருகனை வழிபட வேண்டும் என்றில்லை, அதற்கு முன்போ அது முடிந்த 10 நாட்களிலோ வழிபாடு செய்யலாம். பாதயாத்திரை போகாமல் தைப்பூசத்தன்று மட்டும் முருகனை வழிபாடு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனுக்கு மாலை அணிவித்து முடிந்த அளவிற்கு சிவப்பு நிற பூக்களால் ஆன மாலை அணிவிக்கலாம். இல்லாவிட்டால் மற்ற நிறங்களில் கூட அணிவிக்கலாம். சிலை இருந்தால் பால் அபிஷேகம் செய்யலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் பால் வைத்து வழிபாடு நடத்தலாம்.
யார் இந்த விரதத்தை இருக்கலாம்: முருகன் மீது காதலாக இருக்கக் கூடியவர்கள் அனைவரும் விரதம் இருக்கலாம். குழந்தை பேறுக்காக காத்திருப்போர் இந்த வழிபாடு செய்தால் நல்லது. திருமணம் கைகூட, நோய் தீர, கடன் தொல்லை நீங்க, வியாபாரத்தில் வளர்ச்சியின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் விரதம் இருக்கலாம்.
எதை நினைக்கிறோமோ அதை நினைத்தபடியே நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கிறார் முருகப்பெருமான். பூச நட்சத்திரமானது இன்று (பிப்ரவரி 10ஆம் தேதி) மாலை 7.13 மணிக்கு தொடங்குகிறது. இது நாளை மாலை 7.31 மணிக்கு முடிகிறது. ஆனால் பவுர்ணமி என்று தொடங்குகிறது என்று பார்த்தால் நாளை மாலை 7.51 மணிக்கு தொடங்குகிறது.
பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் நாளை மாலை 7.51 மணிக்கு பிறகுதான் சேர்ந்திருக்கிறது. பொதுவாக சில பூஜைகளில் நட்சத்திரமும் சில பூஜைகளில் திதியும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் தைப்பூச திருவிழாவில் பூச நட்சத்திரம் என பெயரிலேயே சொல்லப்பட்டுள்ளதால் கோயில்களிலும் வீடுகளிலும் பூச நட்சத்திரம் எப்போது இருக்கிறதோ அப்போது அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும் என்பது கணக்கு.
ஒரு வேளை பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நேரத்தில்தான் பூஜை செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் நாளை இரவு 8 மணிக்கு முருகனுக்கு ஒரு டம்ளர் பால் வைத்து பூஜையை செய்யலாம்.
அது போல் விரதத்தை விட நினைப்பவர்கள் மாலை 6 மணிக்கும் விடலாம். இல்லாவிட்டால் பூசமும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் போதும் விரதத்தை விட்டுவிட்டு சாப்பிடலாம். உலகம் முழுக்க மிகவும் உன்னதமாக கொண்டாடப்படும் விழா தைப்பூச திருவிழா ஆகும்.
மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் பக்தர்கள் முருகனுக்கு காவடி சுமந்து அலகு குத்தி வழிபடும் உன்னதமான தைப்பூசத்தன்று அவருடைய அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications