சிங்கப்பூரில் எதிரொலித்த அரோகரா முழக்கம்.. கொரோனாவிற்கு பின் கொண்டாடிய தைப்பூச திருவிழா
சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலித்தது.
சிங்கப்பூர்: கந்தனுக்கு அரோகரா..கடம்பனுக்கு அரோகரா.. என்று சிங்கப்பூரில் தைப்பூச திருநாளில் முருக பக்தர்கள் காவடிகள் சுமந்தும் பால்குடங்கள் எடுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். மலேசியா பத்துமலை முருகன் கோவில், பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில், இலங்கை நல்லூர் கந்தசாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தைப்பூச திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தெப்ப உற்சவம், தேரோட்டம் என தைப்பூசம் திருவிழா களைகட்டியது.

உலகமெங்கும் வாழும் தமிழ்நாடு மக்கள் தைப்பூசம் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.
சிங்கப்பூரில் வாழும் ஏராளமான தமிழர்கள், கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் தைப்பூசத் திருநாளை நேற்று கோலாகலமாக கொண்டாடினர். சிங்கப்பூர் நகரமே தமிழகத்தின் ஆன்மீகத்தலம் போல் காட்சியளித்தது. ஹேஸ்டிங் சாலை, ஷார்ட் சாலை, காதே க்ரீன் சாலையில் ஏராளமான தமிழர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் மேளம், மிருதங்கம், உருமி,நாதஸ்வரம், தவில் இசைத்துக்கொண்டு ஆடிப்பாடியும் உற்சாகமாக ஊர்வலமாக வந்தனர்.
சிங்கப்பூரில் பல பகுதிகளில் ஹேப்பி தைப்பூச திருவிழா என்று பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தமிழர்கள் மட்டுமல்லாது சிங்கப்பூரில் வசிக்கும் பிற நாட்டினரும் முருகன் மேல் பக்தி கொண்டவர்களும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை சுமந்து வந்தனர். பெண்களும் சிறுவர்களும் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.

51வயதான திருநாவுக்கரசு சுந்தரம் பிள்ளை என்பவர் சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறு 30 கிலோ வேல்அலகு குதித்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 73வயதாகும் பிசாமோர்னுக்கு கடந்த 2020ம் ஆண்டில் பக்கவாதம் ஏற்பட்டது. இருப்பினும் சர்க்கர நாற்காலியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
சிங்கப்பூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று நடந்த தைப்பூச திருவிழாவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சர் தான் சீ லெங் பங்கேற்று வழிபாடு செய்தார்.
ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டும் முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தமிழ்க்கடவுள் முருகனுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

சிங்கப்பூரில் உள்ள பாலதண்டாயுதபானி கோயிலுக்கு ஏாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இந்த இரு கோயில்களும் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
மனித வளத்துறை அமைச்சர் சீ லெங் சாமி தரிசனம் செய்து விட்டு பக்தர்களுடன் உரையாடினார். கொரோனா காலத்துக்குப்பின் மக்களுக்கு இயல்புவாழ்க்கை இப்போதுதான் வந்துள்ளது. கொரோனாவை வெற்றிகரமாக கடந்தது எங்கள் தேசத்துக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று மனிதவளத்துறை அமைச்சர் தான் சீ லெங் தெரிவித்தார்.
ஏறக்குறைய 13 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். சனிக்கிழமை இரவு 11.30மணிக்குத் தொடங்கிய தைப்பூசத் திருநாள், நேற்று இரவுவரை தொடர்ந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் முருகன் கோயிலில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பன்முகக் கலாச்சாரங்கள், மதங்கள், அனைத்தும் சங்கமிக்கும் விழாவாக தைப்பூசம் இருக்கிறது. இங்கு அனைத்து மதங்களுக்கும், கலாச்சாரத்துக்கும் மதிப்பளிப்பது பெருமைக்குரியது என சிங்கப்பூரில் வெளியாகும் "தி ஸ்ட்ரைட் டைம்ஸ்" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போல உலகமெங்கிலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில், தண்ணீர் மலை முருகன் கோவில்களில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வெள்ளித் தேரோட்டமும் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.
பத்துமலைக் குகை முருகன் கோவிலில் இந்துக்கள் தவிர சீனர்களும், தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன். இந்துக்களைப் போல் அலகு குத்துதல். காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர். இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நல்லூர் கந்தசாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. கண்டி கதிர்காமம் முருகன் ஆலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மொரிஷியஸ், ஆஸ்திரேலியாவிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
படங்கள் நன்றி பேஸ்புக்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications