தாலி கயிறு.. கல்யாணத்தில் 9 இழைகள் அணிவிப்பது ஏன்? தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஆச்சரியம்
சென்னை: தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? மங்கலநாண் திருமணத்தின்போது பொதுவாக 9 இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறதே ஏன் தெரியுமா, தாளை பனை ஓலை என்றால் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையுமானதுதான் தாலி... உறவினர்கள் முன்னிலையில், ஊரார் முன்னிலையில், மணமகள் கழுத்தில், மணமகன் கட்டவதுதான் தாலி என்கிறோம். இந்த தாலி தங்கத்தால் ஆன பொட்டுடன் மஞ்சள் சரடுடன் கட்டப்படுகிறது. ஆனால், தங்கத்தால் கட்டப்படுவதால் இது தாலி என்று பெயர் பெற்றதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

தாலி பெயர் காரணம்: தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால்தான், இதற்கு தாலி என்று பெயர் பெற்றதாம். தாளை பனைமர ஓலைகள் என்றுமே மங்காது.. அதனால்தான், ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.. அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.
இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து காணப்படும்.. சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாளடைவில் மங்கி போகும்.
பனை ஓலைகள்: ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும்.. தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக பெண்கள் கழுத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பூசப்பட்ட நூல் மட்டுமே தாலியாக கட்டப்பட்டது.. அதற்கும் முந்தைய பண்டைய காலத்தில் தாளை பனைமரம் ஓலையைதான் தாலியாக கட்டினார்களாம்..
அதாவது, மணப்பெண்ணும், மணப்பெண்ணின் வீட்டாரும் உறவினர்கள், மறுபக்கத்தில் மணமகனும் மணமகன் வீட்டார், உறவினர்கள் மற்றும் ஊர் பெரியோர்கள், ஊர்காரர்கள் முன்னிலையில் தாளைபனை மரம் ஓலையில் இன்னாருடைய (தந்தை தாய் பெயர்) மகளை (மணமகள் பெயர்) இன்னாருடைய (மணமகன் தந்தை தாய் பெயர்) மகனுக்கு (மணமகன் பெயர்) ஊர் பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்று அந்த தாளை பனைமரத்து ஓலையில் எழுதுவார்களாம்.
பனைமர நார்: அந்த ஓலையை மடித்து, தாளை பனைமர ஓலையின் நாரை கிழித்து கட்டி மணமகன் கையில் தருவார்கள்.. இந்த நாரை, மணமகன் அங்கிருக்கும் உற்றார், உறவினர் முன்பாக, மணமகள் கழுத்தில் கட்டுவார்.
ஆனால், பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால், உலோகத்தாலான தாலி செய்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பின்னாளில் தங்கத்தால் பொன் தாலி செய்யப்பட்டது.
9 இழைகள்: அதேபோல, அந்த மங்கலநாண் திருமணத்தின்போது பொதுவாக 9 இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது... இந்த 9 இழைகளும், 9 தாத்பரியங்களை குறிக்கிறதாம்.. 1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் 2. மேன்மை 3. ஆற்றல் 4. தூய்மை 5. தெய்வீக நோக்கம் 6. உத்தம குணங்கள் 7. விவேகம் 8. தன்னடக்கம் 9. தொண்டு போன்றவையே 9 இழைகளும் பிரதிபலிக்கின்றதாம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications