தாலி சரடு மாத்தணுமா? தாலி கயிற்றை மாற்ற உகந்த நாள் எது? பழைய கயிறை என்ன செய்யணும்? இதுதான் நடைமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாலி கயிறு மாற்றுவதாக இருந்தால் பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும்? தாலி சரடு எந்தெந்த கிழமைகளில் மாற்றலாம்? ஏற்கனவே அணிந்திருந்த பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி ஒரு வீடியோவில் விலாவரியாக விவரித்துள்ளார்.

திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு தாலிக்கயிற்றில் மஞ்சள் சேர்த்தே கட்டப்படும்.. காரணம், இந்த மஞ்சள்தான், தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாகும். அத்துடன், பெண்களின் மார்பகத்தில் தொற்றுக்களை நெருங்க விடாமல் இவை தடுத்து நிறுத்துகின்றன. இதனால் மார்பக புற்றுநோயும் பெண்களை அண்டுவதில்லை. இதய நோய்களையும் நெருங்க விடுவதில்லை..

spirituality thali saradu thali kayiru

எனவேதான், தாலியை தங்கத்தில் அணிந்தாலும், மஞ்சள் கயிற்றில்தான் கட்ட வேண்டும் என்பார்கள். எப்போதுமே கழுத்தில் போடப்பட்டிருக்கும் மாங்கல்யம் நெஞ்சு குழிக்கு கீழே தொப்புள் இருக்கும் இடத்திற்கு சற்று மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் தொப்புளுக்கு நேராக அணிந்திருப்பார்கள் இது தவறான முறையாகும். எப்போதுமே தாலிக்கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது.

அனிதா : இந்நிலையில், தாலி கயிறு மாற்றுவது எப்படி? இந்த சடங்கின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி தன்னுடைய Viha என்ற யூடியூப் சேனலில் விரிவாகவே சொல்லியிருக்கிறார்.

"தாலி கயிறு மாற்ற நாள், கிழமை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தாலி கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று எல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும். முக்கியமாக கயிறு மங்குவது போல இருந்தால் வந்தால் மட்டுமே, அதை மாற்றவேண்டும். அப்படி புதிய தாலி கயிறு மாற்றுவதானால் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றுவது நல்லதாக இருக்கும்.

தாலிக்கயிறு: எப்போதுமே தாலிக்கயிறு அல்லது தாலி சரடை மாற்றும்போது கிழக்கு நோக்கி உட்கார்ந்து மாற்ற வேண்டும். அதுபோல் தாலிக்கயிறு மாற்றும்போது உங்கள் கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி வயதானவர்கள் யாராவது உங்களுடன் இருக்க வேண்டும். ஆனால், கர்ப்பிணிகள் மாற்ற கூடாது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பிறகே மாற்ற வேண்டும். மற்றபடி யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

தாலிக்கயிறு மாற்றுவதற்காக உட்கார்ந்தால், அந்த கயிறு மாற்றி முடியும்வரை எழுந்திருக்க கூடாது. எனவே கயிறு மாற்றுவதற்கு தேவையானவைகளை முன்கூட்டியே எடுத்து வைத்து கொண்டு, உட்கார வேண்டும்.திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ இவைகளையெல்லாம் ஒரு தட்டில் வைத்து கொள்ளவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு திருமாங்கல்யத்தை மாற்ற வேண்டும்.

கோயில் மரம்: மஞ்சள் குங்குமத்தை தாலிக்கு வைத்துவிட்டு, பூஜையறையில் இறைவனை வணங்க வேண்டும். முடிந்தால் அருகிலுள்ள கோயில்களுக்கு செல்லலாம். அதற்கு பிறகே காலை உணவு சாப்பிட வேண்டும். ஏற்கனவே அணிந்திருந்த பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம். இல்லாவிட்டால் அருகிலுள்ள கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வெளியில் குப்பையில் தூக்கி போட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+