தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா..கோலாகல கொடியேற்றம்..மே 1ல் திருத்தேரோட்டம்
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற மே ஆம்1 ஆம் தேதி நடைபெறுகிறது. பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியாக திருத்தேரில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. பாரம்பரிய பெருமை கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

எந்த விதமான தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞான அறிவியலும் அறியாத காலத்தில் கோபுரத்தின் நிழல் கீழே விழாத வகையில் ஒரு பிரம்மாண்ட கோவிலை எப்படி கட்டினார்கள், கோவில் விமானத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கல்லை எப்படி கோபுரத்தின் மேல் ஏற்றி இருப்பார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விழாக்கள் நடக்கும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான,பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 30ஆம் தேதியும்,தேரோட்டம்,மே 1ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், பிறகு சுப்பிரமணியர், அம்மனுடன் தியாகராஜர் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியாக ராஜ வீதிகளில் வலம் வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications