Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயேசுவின் சிலுவை அகோரா பாடுகள் எப்படிப்பட்டது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலுவை என்று சொன்னாலே இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகள் தான் நம் நினைவில் வரும். கொல்கொதா மலையில் அகோர காட்சியுடன் தொங்கினார். (காலத்தியர் 3:13) மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயபிராமனத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். மனிதனுடைய பாவ, சாப போக்க இயேசு இந்த கொடூர சிலுவை மமரணத்தை சகித்தார். இந்த சிலுவை தண்டை அவமானத்தின் சின்னமாய் இருந்ததை, இயேசுவின் சிலுவை மரணம் அந்த சரித்திரத்தையே மாற்றியது. இயேசுவின் மரணம் நமக்கு பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் தந்து இருக்கிறது. கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு பின்பு, சிலுவை என்பது கிறிஸ்துவர்களின் புனித சின்னமாகவும், அன்பு, மீட்பு, மற்றும் வெற்றியின் அடையாளமாகவும் திகழ்கிறது.

சிலுவை மரண தண்டனை என்பது உச்சகட்ட தண்டனையாகும். இது முதன்முதலில் பெர்சிய நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் ரோமானியர்கள் இந்த தண்டனையை அடிமைகளுக்கும், அந்நியர்களுக்குமே அதிகம் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்காகவே ரோமா அரசாட்சி பல்வேறு அளவுகளில் சிலுவையை செய்து வைத்திருந்தார்கள்.

The sufferings and tortures of Jesus on the cross!

மரச் சிலுவையின் அளவு
இந்த மரச் சிலுவையின் அளவு சுமார் 7-15 அடி உயரமாக இருந்தது. அதின் எடை சுமார் 150 கிலோ வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மரம் கரடுமுரடு தான் இருக்கும் அதில் நெடுமரம், மற்றொன்று குறுக்கு மரம் இரண்டையும் இணைத்து சிலுவை செய்யப்பட்டுள்ளது. சிலுவையில் அறையப்பட்டவரின் உடல் முழு எடையும், ஆணிகளால் அடிக்கப்பட்டு இரண்டு கைகளால் மட்டுமே தாங்குவதால், மிகுந்த வேதனையும், தாகமும், மூச்சு திணறலும் உண்டாகும். உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, இரத்த ஓட்டம் பாதிப்படையும். பின்பு பல மணி தொங்கி மரணம் அடைவார்கள்.

இயேசு பட்ட வேதனைகளும், சித்ரவதைகளும்
கெத்சமனே தோட்டத்திலிருந்தே இயேசுவினுடைய பாடுகள் ஆரம்பித்து, மரணத்திற்கு ஏதுவான துக்கம் அவர் ஆத்துமாவிலே அனுபவித்தவரை காணப்பட்டார். பின்பு பிலாத்து ராஜாவினிடத்தில் கொண்டுபோகப்பட்டு, அவரை வாரினால் அடித்து, தலையில் குட்டி, துன்புறுத்தி, கணத்தில் அறைந்து, முகத்தில் உமிழ் நீரை துப்பி, பரியாசம் பண்ணி, அவருடைய வஸ்திரத்தை உரிந்து, போர் சேவர்களுக்குளே பங்கிட்டு கொண்டனர். இறுதியில் இயேசு வாரினால் அடிக்கப்பட்டு, சிலுவை மரண தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். இரு கைகளையும் இரும்பு கம்பியினால் கட்டி, முதுகில் வாரினால் அடிப்பார்கள். அந்த சவுக்கில் 12 தோல் வர் இருக்கும், மேலும் வாரின் நுனியில் சிறு சிறு கொக்கிகள் கட்டப்பட்டு இருக்கும். ஒவ்வொரு முறையும் அடிக்கப்படும் உடலில் தசைகள் கிழிந்து, முதுகு குழாய்கள் உடைந்து தசைகள் கிழிந்து இரத்த வெள்ளம் பெருகி ஓடும். யூத முறைமையின்படி 40 முறை மட்டுமே சவுக்கு வாரினால் அடிக்கப்படவேண்டும் என்ற சட்டம் இருந்தது, இதை (உபாகமம் 25:3) என்ற வாக்கியத்தில் பார்க்கலாம். ஆனால் இயேசுவுக்கு 39 முறை வாரினால் அடித்து, (12*39= 468) அடிகள் அவருடைய முழு உடலும் கிழிக்கப்பட்டது. உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள் (சங்கீதம் 129:3) என்ற வசனத்தின் படி நிறைவேற்றி, சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள்.

The sufferings and tortures of Jesus on the cross!

இயேசுவுக்கு ஏன் சிரசின்மேல் முள்முடி சூடினார்கள்
முள்ளுகளால் ஒரு முடியை பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலை கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு, யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை பரியசம்பண்ணி, அவர் மேல் துப்பி, அந்த கோலை எடுத்து , அவரை சிரசில் அடித்தார்கள் (மத்தேயு 27:29). முள் என்பது சாபத்தை குறிப்பதாகும். பூமியில் சாபம் எப்படி வந்தது? ஆதாம், ஏவாள் ஏதேன் தோட்டத்திலே தேவன் அவர்களை போசிக்கவேண்டாம் என்று விலக்கி வைத்த ஜீவவிருச்சகத்தின் கனியை, சர்ப்பம் ஏவாளை வஞ்சித்து அந்த கனியை தானும் புசித்து ஆதாமுக்கும் கொடுத்து இருவரும் புசித்தபடியால், தேவனுடைய வார்த்தையை கீழ்ப்படியாததினாலே, தேவன் பூமியை சபித்தார். மீறுதல் என்பது பாவமாய் இருக்கிறது, அதினால் தண்டனை உண்டாயிற்று. (ஆதியாகமம் 3:18) அது உனக்கு முள்ளும் குறுக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைளை புசிப்பாய். இந்த மீறுதல்கள் நிமித்தம் பூமி தன் பலனை கொடுக்காமல், முள்ளும், குறுக்கும் முளைப்பித்தது. எனவே இருவரின் மீறுதல்கள் நிமித்தம், இயேசு தன் சிரசின்மேல் மேல் முள்முடி சூடிக்கொண்டதினாலே, உலகத்தின் சாபத்தை நீக்கிவிட்டார்.

சிலுவையில் 3 ஆணி மேல் ஜீவன் ஈந்தார்
ரோம போர் சேவகர்கள், சிலுவை மரத்தை தரையில் வைத்து, அதின் மேலே இயேசுவை படுக்கவைத்து, அவருடைய கைகளை விரித்து, நீளமான இரும்பு ஆணிகளால் (ஒவ்வொரு ஆணியும் சுமார் 5-7 இன்ச்) முதலில் வலது கையிலும், பின்பு இடது கையிலும், அவருடைய மணிக்கட்டில் ஓங்கி அடிக்கப்பட்டும்,அதன் பிறகு இரு பாதங்களையும் ஒன்றின் மேல் ஒன்றை வைத்து, நீளமான இரும்பு ஆணிகளால் அடிக்கப்பட்டார். பின் அந்த மூன்று ஆணிகளையும் சிலுவை மரத்தின் பின்புறம் முறுக்கிவிடுவார்கள். பொதுவாக மனிதனுடைய மணிக்கட்டில் இருக்கும் இரத்த நாளம் தோல் பட்டை வரை இருக்கும், அவற்றில் ஆணி அடித்தால் உடனடியாக உயிர் போய்விடும் என்று நன்கு அறிந்த ரோமா போர் சேவகர்கள், கைகளில் சரியான இடத்தில் ஆணியை வைத்து அடித்தார்கள், ஆணிகளால் அறைந்த பின் அவரை மரத்தில் ஏற்றி, தொங்கவிட்டனர், இப்படி இயேசு சிலுவையில் சித்ரவதை செய்யப்படும், உபாத்திரவப்படும், மிக கொடூரமாக உடலில் வேதனை அவர் சகித்துக்கொண்டார். பல மணி நேரம் கழித்துதான் ஜீவன் பிரியும். இவ்வாறு இயேசு சிலுவையில் சுமார் 6 மணி நேரம் வேதனை கொண்டவராய், தேகம் முழுவதும் கிழிக்கப்பட்டு, இரத்த சொட்ட சொட்ட, துன்பத்தை அனுபவித்தபடியே, சகித்துக்கொண்டு 7 வார்த்தைகளை கூறினார், மனித குலத்திற்காக தன்னுடைய உயிரை கொடுத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+