இன்ப துன்பங்கள் சரிசமம்..பொறுமை அவசியம்..உகாதி பண்டிகை உணர்த்தும் உண்மை!
மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.
சென்னை:
தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு உகாதி ஆகும். சந்திரனை மையமாக வைத்து ஆந்திரா, கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.
மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

உகாதி பச்சடி
உகாதி புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. மாம்பழம், புளி, வேப்பம்பூ, உப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு உகாதி பச்சடி தயாரிக்கப்படுகிறது. வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்கக்கூடிய இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகளை உணர்த்துவதற்காக உருவாக்கப்படுவதுதான் இந்த உகாதி பச்சடி.

புத்தாண்டின் தொடக்கம்
இந்த பண்டிகைகள், பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கின்றன மற்றும் நாட்டின் கூட்டு கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மக்கள் இதை உகாதி எனவும் மற்றும் கர்நாடக மக்கள் 'யுகாதி' எனவும் அழைக்கின்றனர். மகாராஷ்டிராவில், இது குடி படாவா என கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு
சூரியனை மையமாக வைத்து கொண்டாடப்படும் சித்திரை முதல் நாள் தமிழ்நாட்டில் இது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் நமது மலையாள சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் விஷூ வாக கொண்டாடும் போது பஞ்சாப்பில் இது வைஷாகி யாக கொண்டாப்படுகிறது. ஒடிசாவில் இது பனா சங்க்ராந்தியாக அழைக்கப்படுகிறது.

மகிழ்ச்சி நம்பிக்கை
மேற்கு வங்கத்தில், பொய்லா பாய்சாக் புதிய ஆண்டில் தொடங்குகிறது மற்றும் அசாமில், போஹாக் பிஹூ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால், இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன.

பாரம்பரிய கொண்டாட்டம்
நமது மதங்களின் புனித நூல்கள், இயற்கை மீதான நமது மரியாதையை காட்டும் சம்பவங்கள் நிறைந்தவை. நம் நாட்டில் அறுவடை காலம் என்பது, இயற்கையின் உயிர்ப்பு மற்றும் மிகுதியை கொண்டாடும் நிகழ்வாகும். நமது நாட்டில் பண்டிகைகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக எப்போதும் உள்ளது.

மகிழ்ச்சிக்காக வழிபாடு
உகாதியை முன்னிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு வீட்டினை அழகுபடுத்தியுள்ளனர். இன்று காலையில் குளித்து விட்டு புதிய ஆடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. ஒரு சிலர் குலதெய்வ கோவிலுக்கும் சென்றனர். அம்மன் பூஜையில் தெலுங்கு இனத்தவர்கள் பாட்டு பாடி வழிபாடு செய்தனர். இறைவனுக்கு நைவேத்தியமாக பணியாரம், போளி, பால் பாயசம், புளியோதரை போன்ற உணவுகளை படைத்து வழிபட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications