திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது? தேதியும் நேரமும் அறிவிப்பு!
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுதவதற்கான தேதி, நேரம் ஆகியவை கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்த கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை தரிசிக்கிறார்கள்.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதியும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ரூ 300 கோடியில் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் யாகசாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன.
இந்த கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடத்தப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை, திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருப்பதால் கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என சொல்லப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கான தங்கும் வசதி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்து அவரது அவதார நோக்கம் நிறைவேறிய திருத்தலமாக திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது.
முருகப் பெருமான், குரு பகவானுக்கு காட்சி அளித்து அருளிய தலம், முருகப் பெருமான் சிவபூஜை செய்யும் கோலத்துடன் காட்சி அளிக்கும் தலம், முருகப் பெருமானே தன்னுடைய திருக்கை வேலால் நாழிக்கிணற்றை உருவாக்கிய தலம், அபிஷேகத்திற்கு பிறகு முருகனின் மேனியில் வியர்க்கும் அதிசயமும் நடக்கும். இங்கு நடைபெறும் கந்த சஷ்டி பெரு விழாவும் நிறைவு நாளான சூரசம்ஹார விழாவும் உலக புகழ்பெற்றவை.
திருச்செந்தூரில் முடி காணிக்கை மண்டபம், நாழி கிணறு செல்லும் பாதை உள்ள மண்டபம், அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து, அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பக்தர்கள் தரிசித்து செல்வதற்கான ஏற்பாடுகள் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதையில் குடிநீரி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பணிகள் ரூ 300 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications