புரட்டாசி பௌர்ணமி.. மதுரையில் 5 கருட சேவை.. மாசி வீதிகளில் வலம் வந்த பெருமாளை தரிசித்த பக்தர்கள்
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஐந்து கருட சேவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாசி வீதிகளில் 5 கருட வாகனங்களில் வலம் வந்த பெருமாள்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று ஐந்து கருடசேவை ஆண்டு தோறும் நடைபெறும்.

திருநாங்கூர் திவ்ய தேசத்தில் தை அமாவாசை நாளில் 11 கருட சேவை நடைபெறும். 11 கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் 11 கருட வாகனங்களில் ஏறி வீதி உலா வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநாங்குகூர் செல்வார்கள்.
அதே போல மதுரையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் மதுரையில் பஞ்ச கருட சேவை நடைபெறும். ஐந்து கருட சேவையில், முன்னதாக, கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து தங்கக் கருட வாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும், மற்றொரு கருட வாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினர். இதே போன்று மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள உற்சவரான ரங்கநாதரும், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோவிலிலிருந்து மதனகோபால சாமியும் கருட வாகனத்தில் கூடலழகர்கோயில் முன்பு எழுந்தருளினர் .

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து கருடவாகனங்களில் பெருமாள் மேல மாசிவீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி, கிழக்கு மாசி வீதி என மாசி வீதிகளை வலம் வந்தனர். கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதைக் காண கண் கோடி வேண்டும். அதுவும் 5 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளியதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications