முருகனின் சூரசம்ஹாரம்.. திருச்செந்தூரில் விண்ணை முட்டிய அரோகரா முழக்கம்.. சூரபத்மன் வரலாறு இதுதான்
தூத்துக்குடி: இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.. கந்த சஷ்டிப் பெருவிழாவின் சிகரமான சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்தார் திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆண்டவர்.. பக்தர்கள் விண்ணதிர அரோகரா சரண கோஷங்கள் எழுப்பினார்கள்..
சூரனை கந்தன் வதம் செய்த நாளையே சஷ்டி என்கிறோம்.. சூரபத்மனை அழிப்பதற்காக நடைபெறும் போர் இதுவாகும்.. கொடியவனான அசுரனை வதைக்க முருகனுக்கு மனமில்லை என்பதால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார்...

அறிவுரை: அதன்படி, தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி சூரனிடம் அறிவரை சொன்னார் வீரபாகு. ஆனால், சூரன் அதை பொருட்படுத்தவில்லை.. எல்லாரையுமே அழிக்க துடித்தான்.. இறுதியில், மாயப்போர் முறைகளை கையில் எடுத்தான். ஆனால், அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று இதற்கு அர்த்தம் இல்லை.. சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார் முருகன்..
கச்சியப்ப சிவாச்சாரியார்களும், தேவர்களும், ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தார்கள்.. கந்தனும் அவர்களுக்கு அருள் செய்ததையடுத்து, அதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி நடத்தப்படுகிறது..
முருகப்பெருமான்: அதன்படி, முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே 6 நாட்கள் போர் நடந்தது... முதல் நாள் போரில் சூரபத்மன் மகன் பானுகோபன் போரிட வந்து தோல்வி கண்டு புறமுதுகிட்டுத் திரும்பினான். 2வது நாள் போரில், சூரபத்மனும், சிங்கமுகாசுரன், அதிசூரன், தாரகாசுரன் மகன் அசுரேந்திரனும் உடன் வந்தனர். வீரபாகுத்தேவர் அசுரேந்திரனை கொன்றார்.
3வது நாள், சூரபத்மன் தன் இன்னொரு மகனான இரணியனை போருக்கு அனுப்பி வைத்தான்.. இப்படியே ஒவ்வொரு நாளும் போர்கள் நீடித்தன.. சூரனின் தலையையும் முருகன் வெட்டினார்.. ஆனால், பலமுறை வெட்டப்பட்ட வெட்டுண்ட சூரனின் தலை மீண்டும் மீண்டும் முளைத்தது. சூரபத்மன் மிக திறமையாக போரிட்டான்.
மாய மரம்: அதுமட்டுமல்ல, எக்காரணம் கொண்டும், வீரத்தை வைத்து முருகனை வெல்ல முடியாது என்று நினைத்த சூரபத்மன், தன்னுடைய சூழ்ச்சியை உபயோகித்து மாயையால் வெல்ல முடிவு செய்தான். அதற்காகவே மாமரமாகி உருமாறி நின்றான்.
ஆனால், வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், அரசுரனை வெல்ல ஞானவேலாக மாறியது... மாமரமாக மாறிய சூரபத்மனை வேலாயுதத்தால் முருகப்பெருமான் இரண்டாக பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், இன்னொன்று மயிலாகவும் மாறியது. மாமரத்தின் வடிவில் சூரன் நின்றதால்தான், திருச்செந்தூர் பகுதிகளில் மாமரம் வளர்வதில்லை என்பார்கள். இறுதியில், மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார் முருகப்பெருமான்.
திருமணம்: மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்து தேவர்களை சிறை மீட்டார்.. பிறகு செந்தூரை அடைந்து சிவபூஜை செய்தார். சூரபத்மனை அழித்து, மும்மூர்த்திகளின் குறைகளையும் போக்கினார். தேவேந்திரன் தனக்கும், தேவர்களுக்கும் உதவிய முருகனுக்குத் தம்முடைய நன்றியை புலப்படுத்த விரும்பி தன் மகளான தேவசேனா தேவியை திருமணம் செய்து கொடுத்தார். அதை பிரதிபலிக்கும் வகையிலேயே திருச்செந்தூரில் வருடா வருடம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.
இன்று மாலை சூரசம்ஹார விழாவில் ஜெயந்திநாதர் அவதாரம் எடுக்கும் முருகப்பெருமான், கடற்கரையில் எழுந்தருளினார். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தன.-. மக்கள் அவையில் வந்த ஜெயந்திநாதர் முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை வதம் செய்தார்.
அடுத்ததாக, சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார். ஆனாலும், தொடர்ந்து தலையை ஆட்டியபடி பன்முகத்தோடு போரிட வந்த சூரபத்பனை முருகப்பெருமான் எழுந்தருளி வதம் செய்தார். பிறகு கடைசியாக கடலுக்கு நடுவே மாமரமாக மாறிய சூரபத்மனை வேலாயுதத்தால் முருகப்பெருமான் இரண்டாக பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், இன்னொன்று மயிலாகவும் மாறியது. இறுதியில், மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார் முருகப்பெருமான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications