திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே.. ஆர்ஜித சேவை.. அங்கப்பிரதட்சணம் டிக்கெட் ரிலீஸ்.. புக்கிங் எப்போது?
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது.
திருமலைக்கு செல்லும் ஏழுமலையான் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. சிறப்பு தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இலவச தரிசனத்திற்கு செல்ல ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது இன்று 21ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 22ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். விர்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் 22ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் டோக்கன்களின் ஒதுக்கீடு 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தொடர்புடைய பிரேக் தரிசன டிக்கெட்டுகள், 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ. 300 சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications