டிசம்பர் மாதம் திருப்பதிக்கு போறீங்களா! நாளை முதல் ஆதார் கார்டுடன் தயாராக இருங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் நாளை முதல் தரிசன டிக்கெட்டுகள் பல்வேறு சேவைகளின் கீழ் விற்பனை செய்யப்படும். சரியாக 24 ஆம் தேதி திருப்பதியில் ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.
திருப்பதிக்கு மாதந்தோறும் சென்று வெங்கடாஜலபதியை பார்த்தாலும் நமக்கு போதாது. அங்கேயே இருந்துவிடலாம் என தோன்றும். சிலர் தங்களது சொத்துகளை எழுதி வைத்துவிட்டு கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டும் வருகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. திருமலை திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் பக்தர்கள் 3 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஏழுமலையானை நவம்பர் மாதம் தரிசனம் செய்ய அனைத்து ஆன்லைன் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. சேவைகள், தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவற்றிற்கான டிக்கெட் முன்பதிவுகள் நிறைவடைந்துவிட்டது. அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
இன்று புரட்டாசி 1 தொடங்கிவிட்டது. இதனால் திருமலையில் புரட்டாசி மாத வழிபாடுகள் மற்றும் பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பதியில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்கப்படுகிறது.
லக்கி டிப் மூலம் சில சேவைகள் புக் செய்யப்படுகிறது. அதாவது சுப்ரபாத சேவை, தோமலா சேவை, நிஜபாத சேவை, அஷ்டதல பாத பத்மாராதனை ஆகிய சேவைகள் அடங்கும். இவற்றில் சுப்ரபாத சேவைக்கு அதிகபட்சமாக 350 வரை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
சுப்ரபாத சேவைதான் திருப்பதியில் அதிகாலையில் நடக்கும் முதல் சேவை. இந்த சேவையில் பங்கு பெறுவோர் குலசேகரப்படி வரை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். டிசம்பர் மாதம் சுப்ரபாத சேவையில் பங்கேற்க நினைப்பவர்கள் , டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மார்கழி மாதம் பிறக்கிறது.
மார்கழி மாதங்களில் திருமலையில் அதிகாலையில் சுப்ரபாத சேவை கிடையாது. மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் ஆண்டாள் பாசுரங்கள் மட்டுமே ஒலிக்கும். அதனால் மார்கழி மாதம் நிறைவடையும் வரை திருப்பதியில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. அதுவும் இந்த முறை டிசம்பரில் வரவில்லை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் வருகிறது. எனவே வைகுண்ட ஏகாதசிக்கு ஜனவரி மாதம்தான் டிக்கெட்டை புக் செய்ய முடியும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications