திருமலையில் டிஜிட்டல் மயம்.. லக்கேஜ், மொபைல் போன்களை பக்தர்கள் டெபாசிட் செய்வது இனி ஈஸி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது உடைமை மற்றும் மொபைல் போன்களை விரைவாகவும், எளிதாகவும் டெபாசிட் செய்து திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் ரூ.3 கோடியில் பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனும் பெயரில் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்கணக்கில் கூட காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் உடமைகளை தேவஸ்தான அலுவலகத்தில் டெபாசிட் செய்து விட்டுதான் சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

Tirumala Tirupati Devasthanam automates baggage management system for devotees, says EO Dharma Reddy

மொபைல் போன்களை பக்தர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. எனவே தினசரியும் பக்தர்கள் தரிசனம் செய்யும் முன்பாக தங்களின் உடமைகளை வரிசையில் காத்திருந்து டெபாசிட் செய்து விட்டு டோக்கன்களை பெற்றுச் செல்கின்றனர். சாமி தரிசனம் முடிந்த பிறகு டோக்கன்களை கொடுத்து விட்டு பொருட்களை பெற்றுச்செல்கின்றனர். நேர விரயத்தை தடுக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருப்பதி வரும் பக்தர்கள் தங்களது உடைமை மற்றும் மொபைல் போன்களை விரைவாகவும், எளிதாகவும் டெபாசிட் செய்து திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் ரூ.3 கோடியில் பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனும் பெயரில் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தை திருமலை அன்னமய்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தர்மா நேற்று தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோருடன் இணைந்து செயல் அதிகாரி தர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது :

பக்தர்கள் கவுண்டருக்கு வந்ததும் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் ஆட்டோமேட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்து கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்படும். அதேபோல், மொபைல் டெபாசிட் செய்யும் போது, கியூஆர் கோடு குறியீட்டுடன் இணைத்து ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள் உடமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. என்று தர்மா ரெட்டி கூறினார்.

Tirumala Tirupati Devasthanam automates baggage management system for devotees, says EO Dharma Reddy

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கேட்வே என்ற செல்போன் செயலியை லட்சக்கணக்கான பக்தர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்தச் செயலியால் தேவஸ்தான தகவல்கள், சேவைகளை தெரிந்து கொள்ளலாம். தரிசன டிக்கெட்டுகள் பெறலாம். அறைகள் முன்பதிவு செய்யலாம்.

அதே போல ஏழுமலையான் கோவில்களில் சேவை டிக்கெட், பிரசாதம், பஞ்சகவ்ய பொருட்கள், டைரி, காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக, போன் பே, ஜி பே, கியூஆர் கோடு ஸ்கேனர், டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாகி விட்டதாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+