ஐயோ திருப்பதியில் இப்படி கூட ஏமாற்றுவாங்க! யாரையும் நம்பாதீங்க! தேவஸ்தானம் பரபரப்பு அறிக்கை
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. போலி டிக்கெட்டுகளை கொடுத்து பக்தர்களிடம் பணம் பெற்று மோசடி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த தமிழகத்தைச் சேர்ந்த நெட் சென்டர் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் https://ttdevasthanams.ap.gov.in என்ற முகவரியில் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை எண், முகவரியுடன் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
இடைத்தரகர்களை நாடுவதன் மூலம் பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை இழக்க வேண்டாம். திருமலை- திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம். பக்தர்கள் பெறும் டிக்கெட்டுகள் தரிசனத்திற்கு செல்வதற்கு முன் தேவஸ்தான் விஜிலென்ஸ் ஊழியர்களால் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்படும்.
அப்போது பக்தர்கள் பெற்ற தரிசன டிக்கெட்டுகள் போலியானது என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பக்தர்கள் தேவையில்லாத சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சுவாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வழங்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்கள் பெற்ற டிக்கெட்டுகள் தரிசனத்திற்கு செல்வதற்கு முன் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களால் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்படும். அப்போது பக்தர்கள் பெற்ற தரிசன டிக்கெட்டுகள் போலியானது என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பக்தர்கள் தேவையில்லாத சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
சுவாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வழங்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பண்டிகை காலம், விசேஷ காலம் என்றால் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு வருவார்கள்.
திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித, தோமலா உள்ளிட்ட சேவைகள் மூலமும் இலவச தரிசனம் மூலமாகவும் நடைப்பாதை எனப்படும் திவ்ய தரிசனம் , ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆகியவற்றில் தரிசிக்கலாம்.
அது போல் இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு சுற்றுலா பேக்கேஜ்களை அளிக்கிறது. அது போல் தமிழகத்திலும் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னையிலிருந்து கீழ் திருப்பதி, அங்கிருந்து மேல் திருப்பதி, தரிசனம், உணவு , மீண்டும் சென்னைக்கு ரிட்டர்ன் என தினமும் பக்தர்களை திருப்பதிக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்றுக் கொண்டு அழைத்து செல்கிறது.
இந்த சுற்றுலா கழகங்களும் ரூ 300 தரிசன டிக்கெட்டுகளை மாதா மாதம் 24 ஆம் தேதி புக் செய்துக் கொள்கிறது. இதன் மூலம் ரயில்வேக்கும் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கும் வருவாய் கிடைக்கின்றன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட்டை ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர் ஆகியோர் திருப்பதி கோயிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் இரண்டு பேர் உள்பட 6 பேர் கூட்டணி அமைத்து ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
சுற்றுலா வளர்ச்சி கழகங்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த மோசடியை செய்துள்ளனர். இந்த நூதன மோசடி குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் உடனே விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர், ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் ஒருவர், திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருக்கும் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் கூட்டணி அமைத்து ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்
சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த மோசடியை செய்துள்ளனர். இந்த நூதன மோசடி குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் உடனே விசாரணையில் இறங்கினர்.
டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணிகளில் இருந்த ருத்ர ராஜு, அமர்த்தா யாதவ் உள்பட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆந்திரா மாநில சுற்றுலா மேம்பாட்டு கழக ஊழியர் ஒருவர் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது தெரியவந்தது. இந்த டிக்கெட்டுகளை வைத்து சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் , பக்தர்களை திருப்பதிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது கோயிலில் ஸ்கேன் செய்யும் பணியில் ருத்ர ராஜு உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து அவர்கள் அந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து கோயிலுக்குள் அனுப்பினர். இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் வரை வருமானம் கிடைத்ததுடன், ஒரு டிக்கெட்டை ரூ 2500 வரை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருமலை போலீஸார் ருத்ர ராஜு உள்ளிட்ட மூவரை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை டிராவல்ஸ் ஏஜென்ட், ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர் உள்பட மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications