Tirupati: ஜூன் மாதம் திருப்பதிக்கு செல்ல திட்டமா? காலை 10 மணிக்கு ரெடியா இருங்க! ஆதார் கார்டு மஸ்ட்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஜூன் மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிடுகிறது. இதை இணையதள வசதி மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள்.

தற்போது மே மாதம் வரையிலான தரிசன டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரு வேளை ஏப்ரல், மே மாதங்களில் தரிசிக்க செல்ல வேண்டுமானாலும் சர்வ தரிசனத்தில்தான் செல்ல வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பே ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் திருப்பதியில் ஜூன் மாதம் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதன் படி சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, நிஜபாத தரிசனம் உள்ளிட்ட சேவைகளுக்கான லக்கி டிப் முன்பதிவு மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது.
மார்ச் 20ஆம் தேதி பகல் 12 வரை லக்கி டிப் முன்பதிவுகள் திறந்திருந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் மார்ச் 20ம் தேதி பகல் 12 மணி வெளியிடப்பட்டது. புக் செய்த பக்தர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமும் வரும். மேலும் நமது ஐடியில் போய் ஸ்டேட்டஸையும் செக் செய்து கொள்ளலாம்.
மார்ச் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவற்றுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தொடங்கப்பட்டன. அதே நாளில் பகல் 3 மணிக்கு விர்சுவல் சேவா டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டது.
மார்ச் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சிண தரிசன டிக்கெட்டுகளும் அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு நடந்தது.
அந்த வகையில் மார்ச் 24 ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் இன்று பகல் 3 மணிக்கு ஜூன் மாதத்திற்கான திருப்பதி, திருமலையில் தங்குவதற்கான தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் நடைபெறுகிறது.
ஜூன் மாதம் 2025 ஆம் ஆண்டில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள் பெற விரும்பும் பக்தர்கள், https://ttdevasthanams.ap.gov.in என்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே சென்று, தரிசன டிக்கெட்கள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு பெயர், வயது, ஆதார் எண் அல்லது பாஸ்போர்ட் எண் ஆகியவற்றின் தகவல்களுடன் தயாராக இருங்கள். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை அள்ளிச் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications