உகாதி பண்டிகை.. ஏப்ரல் மாதம் ஏழுமலையானை தரிசிக்க ப்ளான் இருக்கா? ரூ.300 தரிசன டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். விரைவு தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். 4 மாதத்திற்கு முன்பே ஆர்ஜித சேவை தரிசனத்திற்கும் 300 ரூபாய் தரிசனத்திற்கும் டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது வழக்கம்.

ஏழுமலையானை வரும் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதிகாரப்பூர்வ இணைய தளமான https://tirupatibalaji.ap.gov.in இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி உகாதிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாகவோ பின்பாகவே ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இன்றைய தினம் 300 ரூபாய் தரிசனத்திற்கு ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் நாளைய தினம் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஏப்ரல் மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம். அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விரும்பும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications