திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் மாற்றம்.. இனி காணிக்கை செலுத்துவது ரொம்ப ஈஸி
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலில் மாற்றம் கொண்டு வர தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயிலுக்குள் 5 அடி உயரத்தில் ஸ்டீல் உண்டி அமைத்து பக்தர்கள் 3 புறமும் உண்டிலில் பணம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறித்து சொல்லவே தேவையில்லை. திருப்பதி திருமலையில் கூட்டம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த உண்டியலுக்கு காவாளம் என்று பெயர். தினசரியும் கோவிலுக்கு வரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் காணிக்கை பணத்தை இந்த உண்டியலில்தான் செலுத்துவார்கள். குபேரனிடம் தன் திருமணத்திற்காக வாங்கிய கடனை, கலியுகத்தில், மனிதர்கள் யார் யார் என்ன பாவம் செய்தார்களோ, அதற்கேற்ப பணத்தை வசூல் செய்து தன் கடனை அடைத்துவிடுவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் படி திருமால் நம்மிடம் வசூல் செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதீகமாகும்.
பெரிய பித்தளை அண்டாவில் வெள்ளை துணிக்கு மத்தியில் நாமம் போட்டு கட்டி வைத்திருப்பார்கள். பக்தர்கள் மூல ஸ்தானத்தில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்தவுடன் காணிக்கை செலுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்ய வரிசையில் நிற்பது போல இந்த உண்டியலில் பணம் செலுத்தவும் பக்தர்கள் காத்திருப்பார்கள்.
ஏழுமலையானை தரிசித்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக வரிசையில் நிற்கும் போது நீங்கள் காணிக்கை செலுத்த காத்திருக்கும் நேரத்தில் அந்த உண்டியல் சரியாக நிரம்பிவிட்டால், தேவஸ்தான ஊழியர்கள் அதை அறிந்து கொண்டு அதற்கு மேல் அந்த உண்டியலில் காணிக்கை செலுத்த அனுமதிக்கமாட்டார்கள். இந்த பிரமாண்ட உண்டியல்கள் நிரம்பியதும், திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், உடனடியாக அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். நிரம்பிய உண்டியலை சீல் செய்து அங்கிருந்து காணிக்கை பணத்தை எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லும் வேளையில் உண்டியல் அருகே காணிக்கை செலுத்த காத்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் இருவரை தங்களுடன் அழைத்துச் செல்வார்கள்.
இந்த உண்டியல் நிரம்பியதால் ஊழியர்கள் சீல் செய்து எடுத்து சென்றார்கள். அப்போது நான் அவர்கள் உடன் இருந்தேன் என்று இரண்டு பக்தர்கள் சாட்சி கையெழுத்து போட வேண்டும். இது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் தாராளமாக பயப்படாமல் கையெழுத்திடலாம். இந்த நடைமுறை ஆதி காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருவதால் இன்றும் அதனை கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது தேவஸ்தானம். இப்படி உண்டியல் நிரம்பி விட்டது என சாட்சி கையெழுத்துப் போட்ட இரண்டு பக்தர்கள் மீண்டும் ஒரு முறை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதுவும் இறைவனுக்கு வெகு அருகில் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய வைப்பார்கள். அப்போது தேவஸ்தான ஊழியர்கள் அவர்களை அவசரப்படுத்தமாட்டார்கள். சுவாமியை நிதானாக தரிசித்து பிரார்த்தனை செய்துவிட்டு வரலாம். இப்படிப்பட்ட அற்புத வாய்ப்பு திருப்பதி உண்டியல் காவாளம் நிரம்பும் போது அதன் அருகில் நிற்பவர்களுக்கே கிடைக்கும். அதாவது எம்பெருமான் கருணையும் இருந்தால் மட்டுமே நடக்கலாம்.
ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் 12 முதல் 15 ஆண்டா நிரம்பி ஒரு நாளைக்கு ரூ.4 முதல் 5 கோடிக்கு மேல் காணிக்கை வருகிறது. இதில் ஒரு சிலர் உண்டியலில் பக்தர்கள் பணம் செலுத்தும் போது திருடிய சம்பவமும் நடந்துள்ளது. மேலும் இந்த அண்டாவை கோயிலுக்கு வெளியே உள்ள பரக்காமணி காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கோயிலுக்குள் 5 அடி உயரத்தில் ஸ்டீல் உண்டி அமைக்க சோதனை நடத்தப்பட்டது. இதில் மூன்று புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில் இரும்பு கம்பி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் சோதனை முறையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications