அக்டோபர் மாதம் திருப்பதிக்கு போற பிளானா? தரிசன டிக்கெட் புக்கிங் தேதி எப்போது தெரியுமா?
திருப்பதி: திருப்பதிக்கு அக்டோபர் மாதம் செல்லும் திட்டம் இருக்கிறதா? தரிசனத்திற்கு டிக்கெட் வெளியாகும் தேதி எப்போது தெரியுமா? முன்கூட்டியே டிக்கெட் புக்கிங்கை அறிந்து கொண்டு அந்த தேதிகளில் எளிதாக வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம்.
இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்து விடுகின்றனர்.
இந்த கோயிலில் தினமும் சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் குவிந்து வருகிறது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையையொட்டி திருமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் கூட திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 84,797 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் சுப்ரபாதம்,அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வெளியிடப்படும்.
அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அது போல் வாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி மாலை 3 மணிக்கும், அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் ஜூலை 24-ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியமானது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications