ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம்.. பூலோக வைகுண்டமாக ஜொலிக்கப்போகும் திருமலை.. இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 18ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலயத்தை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெருமாளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசியில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.

Tirupati Ezhumalayan Temple Alvar Thirumanjanam 6 hours darshan canceled today

திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே பிரம்மோற்சவம் ஆகும்.

ஆலயத்தின் கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் இறைவனின் சக்தியை, உற்சவர் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து நிகழ்த்தப்படும் வீதிஉலாவிற்கு உற்சவம் என்று பெயர். இந்த நடைமுறைக்கு, கடவுளே, பக்தர்களைத் தேடி வந்து அருள்புரிவதாக ஐதீகம். பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாட்களும் திருப்பதி களைகட்டியிருக்கும். தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி அருள்பாலிப்பார். இந்த ஆண்டு செப்டம்பர் 18 முதல் 26 வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமைகளில், ஏழுமலையான் கருவறை முதல் கோவில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை தினமான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன. ஆழ்வார் திருமஞ்சனத்திற்காக பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் உட்பட பரிமளம் என்னும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் சன்னதி, கொடிமரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.

இதன் காரணமாக காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான வரும் 26 ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கும். வரும் 18ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+