திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்.. நாளை ஆழ்வார் திருமஞ்சனம்.. 6 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு தயாராகி வருகிறது. செப்டம்பர் 12 ம் தேதி செவ்வாய்கிழமை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத உற்சவங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 17 ம் தேதி முதல் பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால் திருமலை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

பிரம்மோற்சவம் துவங்க உள்ளதை முன்னிட்டு செப்டம்பர் 12 ம் தேதி திருப்பதி வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரிமளம் எனப்படும் வாசனை திரவியங்கள் கலந்த நீர் கொண்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதனால் இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களின் தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் தங்க தாமரை சேவையும் செப்டம்பர் 12 ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. பகல் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் செப்டம்பர் 12 ம் தேதி விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு வரும் 18ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனையொட்டு 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெறும். 18ஆம் தேதி ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கிறார். தினசரியும் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை கருடவாகன சேவை நடைபெறும். அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 26ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.
பிரம்மோற்சவம் 18ஆம் தேதி தொடங்க உள்ளதால் இனி வரும் நாட்களில் திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரம்மோற்சவத்தின் போது நடக்கும் தங்க கருட சேவையை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications