திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்! வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருமலை!
திருப்பதி: திருமலை திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில் ஏழுமலையான் கோயில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி நேற்றைய தினம் புனித கொடியேற்றம் நிகழ்ந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த விழா நாளை தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், போக சீனிவாசமூர்த்தி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று கோயிலில் கொடி கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்ற தேவையான புனித தர்ப்பை, கயிறு ஆகியவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர்.
இவை ரங்கநாயக மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி, திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவை கண் கவரும் விதத்தில் உள்ளன. திருப்பதியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேவஸ்தான் நிர்வாக அலுவலகம் உள்பட முக்கிய கூட்டுச் சாலைகளிலும் திருச்சானூர்- திருப்பதி சாலை, சித்தூர்- திருப்பதி சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அது போல் அலிபிரி நுழைவு வாயில், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை உள்ளிட்ட இடங்களில் அலங்கார தோரணங்கள் , கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பதி, திருமலை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் நாளை திருமலைக்கு வந்து பட்டு வஸ்திரத்தை வழங்கவுள்ளார்.
பிரம்மோற்சவத்தின் போது முதல்வர், தனது துணையுடன் வந்து பட்டு வஸ்திரத்தை சாத்த வேண்டும். இதுதான் விதிமுறை. இன்று ஆகம விதிகளின்படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாளை முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி 5,140 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications