கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதியில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் .. பூலோக வைகுண்டமான திருமலை

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. நள்ளிரவு 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டனர். திருப்பதியில் 10 நாட்களுக்கு பக்தர்கள் அனைவரும் பரமபத வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியும்.

திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

Tirupati Tirumala Vaikunta Ekadasi Sorgavasal Tiruappu Devotees chant Govintha

ஏழை பணக்காரர்கள் என அனைவருக்குமே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகக் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் அளவுள்ள மலர்கள் மற்றும் பழங்கள் ஆகியவை கொண்டு கோயிலில் வெளிப்புறம், உள்புறம், பலிபீடம், கொடிமரம் மற்றும் வைகுண்ட வாசல் போன்ற இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது ஏழுமலையான் ஆலயம்.

இன்று நள்ளிரவு 1.45 மணிக்குப் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தரிசன டிக்கெட் பெற்ற பத்தாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக டிக்கெட் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

காலை ஆறு மணிக்கு மேல் இலவச தரிசன டிக்கெட் மற்றும் 300 ரூபாய் கொடுத்த ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச டோக்கன்கள் 9 மையங்களில் 90 கவுண்ட்டர்களில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

4 லட்சத்துக்கும் அதிகமான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு, டோக்கன் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தரிசன டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தங்க ரதத்தில் உலா வந்து மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+