திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா..நவ.27ல் கோலாகல கொடியேற்றம்
திருவண்ணாமலை: கார்த்திகை மாதம் பிறந்தாலே தீப திருவிழா எப்போது வரும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் 27ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக வணங்கப்படுகிறது. அங்குள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை மாதம் பௌர்ணமி நிலவு நாளில் கார்த்திகை நட்சத்திர நாளில் சிவ பெருமானே ஜோதி வடிவாக காட்சி தருவதாக நம்பப்படுகிறது. எனவேதான் திருக்கார்த்திகை நாளில் அதிகாலையில் பரணி தீபமும் மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்றும் 3 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் - கார்த்திகை தீபத்திற்காக 100 மருத்துவ குழுக்குளை அமைக்க வேண்டும் என கார்த்திகைதீப திருவிழா ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருவண்ணாமலை
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்றது அண்ணாமலையார் கோவில் ஆண்டு தோரும் பல்வேறு திருவிழாக்கள் அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றாலும் கார்த்திகை தீபத்திருவிழா புகழ் பெற்றது.

காவல் தெய்வம்
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இம்மாதம் 24ஆம் தேதி ஊரின் காவல் தெய்வமான துர்கையம்மன் உற்ச்சவத்துடன் தொடங்கி 27ஆம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

மகா தீபம்
டிசம்பர் 6ஆம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி திருக்கோவில் வளாகத்தின் உள்ளே நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதியுலா நடைபெற உள்ளது.

தீப திருவிழாவிற்கு அடிப்படை வசதிகள்
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் சேகர் பாபு
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தீபத்திருவிழாவின் போது வரும் விவிஐபிக்களுக்கு அமர இடவசதி மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் கட்டளைதாரர்கள், முக்கிய நபர்களுக்கு கோயிலுக்கு வருவதற்கு அனுமதி டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் 100 மருத்துவ குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், தேர்கள் பவனி அன்று ஒவ்வொரு தேர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

பௌர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பக்தர்களின் அடிப்படை வசதிகள், கார் வாகன நிறுத்தம், கழிவறைகள், குளியல் அறைகள் உள்ளிட்டவைகளை மேம்படுத்தும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்றும் 3 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துகள்
பக்தர்கள் வசதிக்காக 2692 சிறப்பு பேருந்துகள் 6,431 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் குற்றவாளிகளை கண்டறியும் வகையில் கோமிராக்கள் பொருத்தப்பட்டு பேஸ் டிராக்கர் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயிலில் வளாகம் மற்றும் முக்கிய வீதிகள், தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 500 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

காவல்துறை பாதுகாப்பு
பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஐஜி தலைமையில் 5 டிஐஜி, 43 ஏடிஎஸ்பி, 101 எஸ்பி என 12097 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என்றும், மேலும் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளதாகவும் கூறினார் அமைச்சர் சேகர் பாபு. வழக்கமாக வரும் 9 ரயில்கள் இன்றி 19 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதகாவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications