மஞ்சள் நீர் நன்மை.. ரூ.1 நாணயம் போதுமே.. வீட்டில் மகிழ்ச்சி, பணமும் தழைக்க செய்யும் சூப்பர் பரிகாரம்
சென்னை: வீட்டில் செல்வம் நிலையாகவே தங்கியிருக்க வேண்டுமானால் ஒருசில விஷயங்களில் கவனத்தை செலுத்தினாலே போதும்.. குறைகளையும் நிறைகளாக மாற்ற முடியும் என்கிறார்கள் பெரியவர்கள்.. அந்தவகையில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
பெண்கள் அதிகாலையிலேயே கண்விழித்துவிட வேண்டும். காரணம் இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்களாம். பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து, யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டால், லஷ்மி கடாட்சம் எப்போதும் வீட்டில் கிடைக்கும்.

அதேபோல, வாசற்கதவை திறக்கும்போது, "மகாலஷ்மியே வருக" என்று 3 முறை சொல்ல வேண்டும். காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட்டால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதேபோல, தினந்தோறும் காலையில் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை மஞ்சளையும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இதனால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.
எதிர்மறை சக்தி: உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தினமும் அந்த இடத்தில் 2 வேளை சங்கு ஊத வேண்டுமாம். காலை, மாலை 2 வேளையும் சங்கு ஊதி வரும்போது, எதிர்மறை சக்திகளும், குறைபாடுகளும் நீங்கும்..
வெள்ளி, செவ்வாய்களில் ஒரு செம்பு தண்ணீரில் மஞ்சளை கரைத்து, வீட்டை சுற்றி தெளித்துவிடுவதால், வீட்டை சுற்றிலும் துர்சக்திகள் நெருங்காது. இந்த 2 கிழமைகளிலும், 5 முகம் கொண்ட குத்து விளக்கேற்றி திருமகளை வழிபடுவதால், குடும்பத்தில் நன்மை பிறக்கும்.
பூஜையறையில் வீட்டில் சங்கு இல்லாவிட்டால், பூஜை முடிந்ததும், மணி அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றலானது, மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்பட்டுவிடும். வீட்டில் வைத்துள்ள துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருவதாலும், எதிர்மறை சக்திகளிலிருந்து காத்து கொள்ளலாம். வாஸ்து செடிகளை மட்டுமே வீட்டில் வளர்க்க வேண்டும். ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகுமாம்.
1 ரூபாய்: வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது. எதிர்பாராத விதமாக இவ்வாறு அமைந்தால், நீரிருக்கும் பகுதிகளில் மண்ணை தோண்டி, 1 ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டுமாம். அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை அடைத்து வைக்காமல், தூக்கி எறிந்துவிட வேண்டும்.
காலை நேரங்களை போலவே மாலை வேளைகளிலும், வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. அதற்காக மாலை நேரங்களில் குப்பையை வெளியில் கொட்டக்கூடாது. இருட்டுவதற்கு முன்பதாகவே வீட்டில் விளக்கேற்றிவிட வேண்டும். விளக்கு வைத்ததும், தலை வாருவது, பேன் பார்ப்பது, முகம் கழுவது கூடாது. மாலையில் வீட்டில் விளக்கேற்றும்போது, வீட்டின் தலைவாசல் 2 புறமும் மணல் அகல்விளக்கு ஏற்றி வைப்பது நலன்பிறக்க வைக்கும்..
கடன் பெற கூடாது: பால், தயிர், பச்சைக்காய்கறிகளை இரவில் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. அப்படியே யாருக்காவது பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசற்படியில் நின்றுகொண்டு தரக்கூடாது. எப்போதுமே ஒரு பொருளை பெறுபவரும் வாங்குபவரும் வாயிலுக்குள்ளிருந்துதான் அவைகளை பெறவோ, தரவோ வேண்டும்.












Click it and Unblock the Notifications