Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணபதிக்கு தினந்தோறும் தோப்புக்கரணம் போட இதுதான் காரணம்.. காது மடலில் நரம்புகள்.. அத்தனையும் நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தோர்பி என்ற வார்த்தைக்கு "கை" என்று பொருள். கர்ணம் என்ற வார்த்தைக்கு "காது" என்று பொருள்... அதாவது கைகளால் காதை பிடித்துக் கொண்டே, நெற்றிப்பொட்டில் குட்டு வைத்து கொள்ள வேண்டும். அப்போது முழங்காலை மடக்கி நிமிர வேண்டும்... இந்த செயல்பாட்டுக்குதான் தோர்பிகர்ணம் என்று சொல்வார்கள்.. இதுவே தோப்புக்கரணம் என்ற வார்த்தையாக மாறிவிட்டது. இந்த தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதேசமயம் தோப்புக்கரணம் எப்படி நடைமுறைக்கு வந்தது? ஆன்மீகத்தில் இதற்காக சொல்லப்பட்டுள்ள காரணங்கள் என்னென்ன தெரியும்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

கஜமுகாசுரன் என்ற அசுரன், தான் பெற்ற சக்தி வாய்ந்த வரத்தின் வலிமையால், வானுலகில் இருந்த தேவர்களை எல்லாம் தனக்கு அடிமையாக வைத்திருந்தான். அந்த தேவர்களுக்கு சொல்ல முடியாத கொடுமைகளை தந்து வந்துள்ளான்.. அதிலும் தன்னை எப்போது பார்த்தாலும் தேவர்கள் எல்லாம் உடனே தோப்புக்கரணம் போட வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டான்.

Spiritual Thoppukaranam Vinayagar

உடனே அனைத்து தேவர்களும், அசுரனுக்கு பயந்து, அவனை பார்க்கும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட்டு வந்தனர்.. ஒருகட்டத்தில் அசுரனின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகவும், அவைகளை பொறுக்க முடியாத தேவர்கள், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். விநாயகரும், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய சென்றார்..

ஆனால், அந்த அசுரன், விநாயகரையும் தனக்காக தோப்புக்கரணம் போடவேண்டும் என்று உத்தரவிட்டான். இதைக்கேட்டு கோபமடைந்த விநாயகர், தன்னுடைய தந்தத்தாலேயே, அசுரனை குத்தி கொன்றார்.. உடனே அனைத்து தேவர்களும் , விநாயகருக்கு நன்றி சொல்லும் விதமாக தோப்புக்கரணம் போட்டு, மரியாதை செலுத்தினார்களாம். அதனால்தான், விநாயகருக்கு தோப்புக்கரணம் செலுத்தும் வழக்கத்தை பக்தர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

மற்றொரு புராண காரணம்

தீவிர சிவபக்தனான ராவணன், கயிலையில் தவம் இருந்து, சிவனை வேண்டி இலங்கையில் பிரதிஷ்டை செய்திட ஒரு லிங்கத்தை சிவனிடமிருந்து பெற்று வந்தான்.

சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டால் ராவணனை யாராலும் அழிக்க முடியாமல், ராவணனின் ஆணவமும் அதிகமாகிவிடும் என்பதால், அதனை தடுக்க தேவர்கள் விரும்பினர். எனவே விநாயகரின் உதவியை நாடி, விநாயகரை ஒரு பிராமண இளைஞன் உருவத்தில் ராவணனை தொடர்ந்து செல்லும்படி வேண்டினர்.

அப்படி செல்லும்போது, ராவணனுக்கு இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்ற உணர்வை விநாயகர் ஏற்படுத்தினார். ராவணன் வேறு வழியின்றி சிவலிங்கத்தை கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையினால் அந்த சிவலிங்கத்தை, அங்கிருந்த பிராமண இளைஞனிடம் தந்து, தான் வரும்வரை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான்.

அதற்கு அந்த இளைஞன், லிங்கத்தை 3 மணித்துளிகள் மட்டுமே சுமந்திருப்பேன். அதற்குள் வந்து திரும்ப பெறவேண்டும் என்றான். இந்த நிபந்தனையை ஏற்ற ராவணனும், பிராமண வேடம் பூண்ட இளைஞனிடம் லிங்கத்தை தந்துவிட்டு சென்றார். பிறகு விநாயகர் 3 முறை ராவணனை கூப்பிட்டு பார்த்துவிட்டு, லிங்கத்தை தரையில் வைத்துவிட்டான்.

திரும்ப வந்த ராவணன் தன்னுடைய எல்லா முயற்சியும் வீணாகிவிட்டதே என்று கோபத்தில் இளைஞனின் நெற்றிப்பொட்டில் குட்டினான். இறுதியில் விநாயகரின் சுயரூபம் தெரிந்ததுமே, தன்னுடைய தவறை நினைத்து தண்டனையாக, 2 கைகளால் தலையில் குட்டிக் கொண்டு, 2 காது மடலையும் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான். இதிலிருந்துதான் விநாயகருக்கு பலரும் போடும் தோப்புக்கரணம் ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது.

மற்றொரு காரணம்

தங்கையாகிய பார்வதி தேவியை பார்ப்பதற்காக மகாவிஷ்ணு, வீட்டிற்கு சென்றபோது, விஷ்ணுவின் சக்கரத்தை எடுத்து சுற்றுவதும், சங்கை எடுத்து ஊதுவதுமாக குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தாராம் தங்கை.. உடனே தன்னுடைய தங்கையின் மகன் விநாயகரை தண்டிப்பதற்காக, அவனது தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடு என்று விளையாட்டாக சொன்னாராம் மகாவிஷ்ணு... உடனே விநாயகர் அவ்வாறு செய்ய, அதையே நாம் பின்பற்றலானோம் என்றும் காரணம் உள்ளது.

இப்படி பல காரணங்கள் இருந்தாலும், தோப்புக்கரணம் போடுவது மிகச்சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது.. இதனால் மூளை நரம்புகள் வலு பெறுகிறது.

உடலுக்கு நன்மைகள்

காதுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. அதை இழுக்கும் பொழுது, ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது.. உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.

வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால், காது நரம்புகளை நாம் பிடிக்கும்போது, நினைவுத்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவேதான், குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை தோப்புக்கரணம் செய்ய சொல்கிறார்கள்.

கர்ப்பிணிகள் தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் போடும்போது, காலில் சோலியஸ் என்ற தசை சிறப்பாக இயங்குகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது.. இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு கண்கள் கீழ், மேல்தாடை, ஈரல், காது நரம்பு என அத்தனை உறுப்புகளின் தொடர்பு புள்ளிகளும் உள்ளதால்தான், அனைத்து உடல் உறுப்புகளும் பலன் பெறுகின்றன

இடுப்பிலுள்ள ஜவ்வு, எலும்பு தசைகளும் உறுதி பெறுவதால்தான், கர்ப்பிணிகளும் தோப்புக்கரணம் போடலாம் என்கிறார்கள்.. இதனால், கருப்பை சுருங்கிவிரிந்து, சுகப்பிரசவம் எளிதாக நடக்கும். அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.. கால்கள், இடுப்பு, முதுகு, கைகளில் உள்ள தசைகளை வலுப்பெறுகிறது. செரிமானம் அதிகமாகிறது.. தூக்கமின்மை பிரச்சனை தீர்கிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+